உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு அறிக்கையில் இருந்து ....
மாவனல்லை சிலை உடைப்பு நடந்தது எப்படி? தொடர் - 6
தமிழில் ஏ.ஆர்.ஏ.பரீல்
கபீர் காசிமின் இணைப்புச் செயலாளராக செயற்பட்ட முகம்மது ராசிக் முகமட் தஸ்லீம் வணாத்தவில்லுவில் ஆயுத களஞ்சியசாலை கண்டுபிடிக்கப்பட்டபோது இரகசிய போலீசாருடன் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றியதற்கான சான்றுகள் உள்ளன.
அவர் தனது வீட்டில் நித்திரையில் இருந்த போது 2019 மார்ச் 9 ஆம் திகதி தலையில் சுடப்பட்டு உள்ளார். இதனால் அவர் தற்போது ஒரே இடத்தில் படுத்திருக்கிறார். அவரை கொலை செய்யும்படி வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே அவர் சூழப்பட்டுள்ளார்.
இவருக்கு ஐக்கிய ராஜ்ஜியத்தில் மேலதிக சிகிச்சை தேவையாக உள்ளது. அந்த சிகிச்சைகளுக்கான செலவுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரை செய்கிறது.
இலங்கையையை ஓர் இஸ்லாமியர் ராஜ்யமாக மாற்றும் பாரிய திட்டத்தின் ஒரு பகுதியாக வனாத்தவில்லுவிலிருந்து வெளியானது. இரகசிய போலீசாரால் இவ் விபரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இலங்கையை இரத்த ஆறாக மாற்றுவோம் என ஒரு சந்தேக நபர் கூறியுள்ளதில் இருந்து இத்திட்டத்தின் தன்மை தெளிவாகிறது.
இந்த திட்டம் பெண் இத்திட்டம் 2020இல் பாரிய தாக்குதல் நடத்துவதற்கான என்பது தெரிகிறது. எவ்வாறாயினும் பின்பு குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் அதன் பின்னரான சம்பவங்களின் பிரதிபலனாகவே சஹ்ரானால் தாக்குதல் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
வனாத்தவில்லுவில் கைப்பற்றப்பட்ட படி பொருட்களில் 5 டின் நைட்ரிக் அமிலம் (டின் ஒன்று 35 கிலோ) யூரியா பொட்டாசியம் நைட்ரேட் 110 கிலோ, 99 டெடனேட்டர்கள், லெட் பல்புகள், கூடாரம், உள்நாட்டு துப்பாக்கி மற்றும் கெரில்லா யுத்தத்திற்கு தேவையான உபகரணங்கள் அடங்கியிருந்தன.
2019 ஜனவரி 17-ஆம் தேதி அரசு சேவை மற்றும் ராணுவ உளவுப் பிரிவின் அதிகாரிகள் அவ்விடத்துக்கு சென்றார்கள். கைப்பற்றப்பட்ட டெடனேட்டர்கள் இந்தியாவில் மின்சாரம் பயன்படுத்தாது உற்பத்தி செய்யப்பட்ட வகைகள் ஆகும்.
இவை இலங்கையிலேயே கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இவ்வகையான டெடனேட்டர்கள் உலக கற்கள் மூலம் உபயோகப்படுத்தப்படுகின்றன.சந்தேக நபர்களில் ஒருவரான
முபிஷாட் பார்சல் குண்டு தயாரிக்கும் முறை பற்றி ஆங்கிலத்தில் குறிப்புகளை எழுதி வைத்திருந்தார்.
ஹாதியாவின் வாக்குமூலத்தின் படி சஹ்ரானின் குழு ஐ.எஸ். இன் டாபிக் எனும் சஞ்சிகை ஊடாக குண்டு தயாரிக்கும் விபரங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
சாதிக் மற்றும் சாஹிட்டின் தந்தையான ரஷீட் முகமட் இப்ரஹிம் 2019 ஜனவரி 22 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் தடுத்து வைக்கப்பட்டு 2019 ஜனவரி 25ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரது வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது 390 சீடிகள் ஓர் விமான ரைபிள், மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பச்சைநிற பின்புலம், வீடியோ கமரா ஒளிவிளக்குகள், ஒளிப்பதிவு செய்வதற்கு ஒளிபரப்பு செய்வதற்கும் தேவையான மேலும் உபகரணங்கள் என்பனவும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன.
வீட்டின் இரண்டாம் மாடியில் நிர்மாணிக்கப்பட்ட தனியான அறைக்குள் இவை வைக்கப்பட்டிருந்தன.இந்த அறை ஒளிப் செய்யும் அறையாக அமைந்திருந்தது.
சஹ்ரானின் ஆராய்ச்சிகள் வீடியோக்களை பதிவு செய்வதற்கு இந்த அறை உபயோகப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
வனாத்தவில்லு காணியிலிருந்து கைது செய்யப்பட்ட நால்வரும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அறிய கிடைத்தாலும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் 11 பிரிவின் கீழ், மேற்கொள்ளப்பட்ட வரையறுத்தல் உத்தரவின் கீழ் இருவர் விடுதலை செய்யப்பட்டதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இரகசியப் பொலிசுக்கு சென்று தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நால்வரில் இருவர் பாடசாலை மாணவர்கள் என அறிவித்ததாக பிரதான விசாரணை அதிகாரி பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் மாரசிங்க தனது சாட்சியத்தின் போது தெரிவித்துள்ளார்.
எனினும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகளின் விஜயத்தின் திகதி அல்லது விஜயம் தொடர்பான எவ்வித விபரங்களையும் அளிக்கவில்லை.
பாடசாலை மாணவர்கள் இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை விரைவில் பூர்த்தி செய்து, அறிக்கை சமர்ப்பிக்கும்படி விசாரணைையாளர்களுக்கு சிரேஸ்ட பிரதி போலீஸ் மா அதிபர் மற்றும் இரகசிய பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் அறிவித்ததாக மேலும் தெரியவந்துள்ளது.
இதன்படி வனாத்தவில்லுவில் கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு (முபிஸின் மைத்துனர்கள்) எதிராக எவ்வித தகவலும் தேடி கண்டுபிடிக்க முடியாது என தெரிவித்த விசாரணையாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை ஒன்றை தயாரித்து வழங்கியிருந்தார். அவர்களது பெயர் முஹம்மத் நபிஸ் முஹம்மத் நப்ரித் மற்றும் முகமட் நபீஸ் முகமட் நவீத் ஆகும்.
இது தொடர்பில் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகரவிடம் ஆணைக்குழுவில் கேள்வி எழுப்பிய போது மனித உரிமை ஆணைக்குழுவின் எவ்வித தலையீடு தொடர்பில் இடம்பெறவில்லை என அவர் ஆணைக் குழுவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார் என்றாலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பி அறிக்கையின்படி நவீத் மாத்திரமம் பாடசாலை செல்லும் வயதுக்குரியவர் என தெரியவந்தது.
அவர்கள் இருவரும் அப்போதைய பாதுகாப்பு அமைச்சரான மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய விடுதலை செய்யப்பட்டனர். 2019 ஏப்ரல் 9ஆம் தேதி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உத்தரவில் கையொப்பமிட்டு இருந்தார். தான் கையொப்பம் இடுவதற்கு அந்த ஆவணத்தை தன்னிடம் சமர்ப்பித்த அதிகாரிகளே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். (தொடரும்)
www.newstimetamil.com






No comments