Breaking News

பிரபல டிவி சேனலில் நேரடியாக ரிலீஸ் ஆகும் கதிர் - சூரியின் அசத்தல் காம்போ படம்!





விக்ரம் வேதா படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்ற கதிர், விஜய் நடித்த பிகில் திரைப்படத்திலும் முகம் காட்டினார். அவருக்கும் தற்போது ரசிகர்கள் பட்டாளம் வந்துவிட்டது. கதிரின் அடுத்த படம் என்ன என்பது குறித்து அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கதிர் மற்றும் சூரி இணைந்து நடித்துள்ள கலகலப்பான குடும்பத் திரைப்படமான சர்பத் திரைப்படம் வரும் ஏப்ரல் 11, ஞாயிறு மாலை 4 மணி மற்றும் இரவு 7 மணிக்கு நேரடியாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகிறது.

7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'சர்பத்' படத்தை பிரபாகரன் இயக்கி இருக்கிறார். இதில் கதிருடன் முதல் முறையாக சூரி இணைந்து நடித்திருக்கிறார். கதாநாயகியாக ரகசியா, முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து, ஆகியோர் நடித்துள்ளனர்.


No comments