40 கிராம் ஹெரோயினுடன் திருமலையில் ஒருவர் கைது!
(கியாஸ் ஷாபி)
திருகோணமலை ரொட்டவெவ பிரதேசத்தில் நேற்றிரவு (25) 40 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொட்டவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான குடும்பஸ்த்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக ரொட்டவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க பட்டிருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
www.newstimetamil.com






No comments