கிண்ணியாவில் பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை!
கிண்ணியாவில் பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை!
( கியாஸ் ஷாபி)
கிண்ணியா பிரதேசத்தில் மறு அறிவித்தல் வரும் வரை சகல பிரத்தியேக வகுப்புக்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தெரிவித்தார்.
கிண்ணியா பிரதேச கொரோனா கட்டுப்பாட்டு குழு கூட்டம் இன்று (26) காலை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. அதில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போது பாடசாலைகளில் நடைபெறுகின்ற லீவு கால விசேட வகுப்புக்கள் கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைய, ஒரு வகுப்பில் 50 வீதமான மாணவர்களே இருக்க வேண்டும். இதனை வலயக் கல்வி அதிகாரிகள் அடிக்கடி மேற்பார்வை செய்வது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இதேபோன்று அரசாங்கத்தின் சுற்றிக்கைக்கு அமைய, மே மாதம் 31 ஆம் தேதி வரையான காலப்பகுதியில் அனைத்து பொது நிகழ்வுகளும் வைபவங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. இதனை கண்டிப்பாக எமது பிரதேசத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.






No comments