கிண்ணியாவில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி பலி!
கிண்ணியாவில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி பலி!
(கியாஸ் ஷாபி)
கிண்ணியா பிரதேச அரைஏக்கர் - காக்காமுனை வீதியில் இன்று நடைபெற்ற விபத்தொதொன்றில் 9 வயது சிறுமி அதே இடத்தில் பலியானார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா, காக்காமுனை அரை ஏக்கர் பிரதேசத்தைச் சேர்ந்த குதுபுள்ளா பாத்திமா நிஹா என்ற சிறுமியே இவ்வாறு பலியானவராவார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுமி பிரத்தியேக வகுப்பு ஒன்றுக்குச் சென்று, வீடு திரும்பும் வேளையில் எதிரே வந்த லொறி ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பபட்டுள்ளது.
கிண்ணியா காக்காமுனையைச் சேர்ந்த லொறிச் சாரதி பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.







No comments