கிண்ணியா இளைர்களின் கோரிக்கைகளுக்கு 48 நாட்களில் தீர்வு!
கிண்ணியா பிரதேச இளைஞர்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் இன்னும் 48 நாட்களில் நிறைவேற்றி வைப்பதற்கு அதிகபட்ச முயட்சிகளை எடுப்பதோடு, மேலும் இனங்காணப்படுகின்ற பிரச்சினைகளையும் அவ்வப்போது தீர்த்து வைப்பதாகவும் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று (31) திருகோணமலை இளைஞர்களுக்கு உறுதிமொழி அளித்தார்.
இக்கலந்துரையாடலில் இளைஞர் பாராளுமன்ற அமைச்சர், உறுப்பினர்கள் மற்றும் மாவட்டதிலுள்ள சில இளைஞர் அமைப்புக்களின் பிரதிதிகள் நேரடியாக கலந்துரையாட வாய்ப்பளிக்கப்பட்டது.www.newstimetamil.com
இதன்போது கிண்ணியா பிரதேசத்தில் உள்ள அல் அக்ஸா தேசிய பாடசாலை மற்றும் கிண்ணியா மத்திய கல்லூரி தேசிய பாடசாலை ஆகியவற்றுக்கான ஜிம் நிலையம் மற்றும் உள்ளக விளையாட்டரங்குகளை நிர்மானித்து தர வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. www.newstimetamil.com
மேலும் கிண்ணியா பிரதேசத்துக்கான பொது ஜிம் நிலையம் மற்றும் கிண்ணியாவில் காணப்படும் பிரதான மூன்று விளையாட்டு மைதானங்களான எழிலரங்கு மைதானம், அல்-இர்பான் மைதானம் மற்றும் முனைச்சேனை மைதானம் ஆகியவற்றை புனர்நிர்மாணம் செய்வதற்கான யோசனைகளும் இளைஞர்களால் முன்வைக்கப்பட்டன.
அத்தோடு, கிண்ணியாவில் சட்டபூர்வமாக அனுமதி பெறாமல் சுமார் 26 விளையாட்டு கழகங்களை கையாண்டு நடாத்தி செல்லும் கிண்ணியா கிரிக்கெட் மன்றக்குழுவை சட்டபூர்வமாக இலங்கை தேசிய கிரிக்கெட் மன்றகுழுவில் இணைத்து அதனை அரச அனுமதியுள்ள ஒரு மன்றக்குழுவாக அனுமதி பெற்றுத் தருமாறு வேண்டி ஒரு கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
கிண்ணியா பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கான ஒரு கட்டிடம்மும் அத்துடன் இணைந்தவாறு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் இயங்கும் தொழில் பயிட்சி நிலையம் ஒன்றையும் பெற்றுத் தர வேண்டும் எனவும் அமைச்சரை வேண்டிக் கொண்டனர்.
மேற்படி கோரிக்கைகள் அடங்கிய மகஜரை திருமலை மாவட்ட இளைஞர் பாராளமன்ற ஒருங்கிணைப்பு குழு அமைச்சர் ஆர். முகம்மது சபான் இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் கையளித்தார். www.newstimetamil.com










No comments