Breaking News

நாச்சிக்குடா பிரதேசத்துக்கு புதிய விளையாட்டு மைதானம்




திருகோணமலை நாச்சிக்குடா பிரதேச இளைஞர்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த   கரப்பந்து மைதானம் ஒன்றை அமைப்பதற்காக  ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் இன்று (1) மேற்கொள்ளப்பட்டன. 

நாச்சிக்குடா கோல்டன் ஸ்டார் விளையாட்டு கழகம் மற்றும் அப்பகுதி இளைஞர்களினாலும் பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் உப தவிசாளர்  முகமட் நௌபரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது குறித்து உதவி தவிசாளர் கருத்துத் தெரிவிக்கையில், இப்பகுதி இளைஞர்களின்  தேவைகளை கருத்திற் கொண்டு மைதானம் அமைய வேண்டிய இடத்தை நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களிடம் மைதானம் அமைக்கப்பட வேண்டிய திட்டங்களினையும் கேட்டறிந்துகொண்டேன்.

2021ம் ஆண்டின் பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் அபிவிருத்தித் திட்டத்தில் என்னால் முன்மொழியப்பட்டு நாச்சிக்குடா கிராமத்திற்கு புதிய கரப்பந்து மைதானம் அபிவிருத்தி செய்வதற்காக தொழில் நுட்ப அத்தியட்சகர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களினால் நாச்சிக்குடா கோல்டன் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனைக்கு அமைவாக  இதற்கான மதிப்பீடு செய்யப்பட்டது என்று தெரிவித்தார். www.newstimetamil.com 


No comments