உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழ அறிக்கையிலிருந்து....
சஹ்ரானின் தலைமறைவு
தொடர் - 13
தமிழில் : ஏ.ஆர்.ஏ. பரீல்
2017 ஆம் ஆண்டு நவம்பர் நடுப்பகுதியில் கின்தோட்டையில் சில சிங்கள மற்றும் முஸ்லீம் குழுக்களுக்கிடையில் வன்முறைகள் ஏற்பட்டன.
ஒரு சிறிய வாகன விபத்தினால் உருவான சம்பவம் இது என பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இந்த விபத்து நவம்பர் மாதம் 12 ஆம் தேதி இடம் பெற்றது.இது மிகவும் மோசமான இன வன்முறையாக மாற்றம் பெற்றது.
சில சிங்கள மற்றும் முஸ்லிம் குழுக்கள் சம்பந்தப்பட்ட கிந்தோட்டை சம்பவம் தொடர்பில் சஹ்ரான் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றினை பதிவேற்றினார்.
அப்பதிவில் சஹ்ரான், இஸ்லாமிய ஆட்சி, ஹிஜ்ரத், ஷரியா சட்டம், ஜிஹாத் என்பவற்றுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவு 2017. 11. 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
2014 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியிலிருந்து அவர் தலைமறைவாக இருந்த நாட்களிலேயே நாட்டின் பல பகுதிகளில் பயிற்சி முகாம்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்தி வந்தார்.
சஹ்ரான் தனது முதல் பயிற்சி முகாமை மதவாச்சி, ரம்பேவையில் 2017 இல் நடத்தினார். இப்பயிற்சி முகாமில் சுமார் 13 பங்கு கொண்டனர்.
ரீ 56 ஆயுதம் உபயோகிக்கும் முறை பற்றி பயிற்சி பெற்றதாகவும் அவர்கள் வாக்குறுதி அளித்தனர்.
அத்தோடு மல்வானை பண்டா விளையாட்டரங்கில் கருத்தரங்குகளை நடாத்துவதற்கான பூர்வாங்க வேலைகளை செய்தார்.
2014 டிசம்பர் மாதம் 16ஆம் தேதி ஜமாஅதே மில்லதி (JMI) இப்ராஹிம் அமைப்புக்குள் உருவான கொள்கை முரண்பாடுகளைத் தீர்த்து வைப்பதற்கான கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ் அமைப்பின் உறுப்பினர் உமைர் முகமட் சிரியாவுக்குச் சென்று IS உடன் இணைந்து போராடுவதே ஜிஹாத் எனும் கருத்தினைக் கொண்டிருந்தார்.
இதேவேளை ஜமீல் என்பவர் ஜிஹாத் யுத்தம் இலங்கையிலே நடாத்தப்பட வேண்டும் எனும் கொள்கை கொண்டிருந்தார்.
2017 இறுதிப் பகுதியிலும் 2018 ஆரம்ப பகுதியிலும் சஹ்ரான் ஜனநாயக ஆட்சி கட்டமைப்பினை விமர்சித்து வந்தார். இஸ்லாமிய ஆட்சியில் ஜனநாயகத்துக்கு இடமில்லை என்ற அவரது புரிதலுக்கு அமைவாகவே இவ்வாறு அவரால் விமர்சிக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதிக்கும் 27 ஆம் தேதிக்கும் இடையில் அவர் வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டார்.
அதில் சட்டம் இயற்றுபவர்கள் மற்றும் நீதித்துறையினையும் விமர்சித்திருந்தார். எவராவது ஒருவர் குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழிகாட்டலின் கீழ் வாழ்வது என்றால் சட்டசபை, நீதித்துறையும் மதிக்கத் தேவையில்லை. அவர் அல்லாஹ்வின் நேர்த்தியான வழிகாட்டலின்படியே வாழ்வார்.
பாராளமன்றம் காபிர்களுக்கு (முஸ்லிமல்லாதவர்களுக்கு) உரிய இடமாகும். முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாத நீதிமன்றங்களில் உதவியை நாடுவதை அல்லாஹ் அல்லாஹ் மறுத்துள்ளான். அல்லாஹ்வை மறுக்கும் இவ்வாறான நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் கட்டாயமாக முஸ்லிம்களால் ஜிஹாத் யுத்தத்தினால் கொல்லப்பட வேண்டுமென அதில் கூறினார்ச
சஹ்ரான் அரசியல் கட்சிகள் மீதும் தனது கவனத்தைச் செலுத்தி உள்ளார். அவர் 18 ஜனவரி 6ஆம் தேதி இஸ்லாமிய அரசு எண்ணக்கருவும் இலங்கை அரசியல் கட்சிகளும் எனும் தலைப்பில் வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இஸ்லாமிய ஆட்சியில் ஜனநாயகம் இல்லை. ஜிஹாத் மாத்திரமே உள்ளது. ஜிஸ்யா (முஸ்லிம்கள் அல்லாதோர் மீது வரி அறவிடல்) மற்றும் ஷரிஆ சட்டம் அமுலில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
சஹ்ரான் இவ்வாறு தெரிவித்துள்ளமை இஸ்லாமிய ஆட்சியில் வேறு மத மோ ஜனநாயகமோ இருக்க முடியாது என்பது தெளிவாகின்றது.
கண்டி, தென்னங்கும்ரவில் பள்ளிவாசல் ஒன்றினுள் பிரித் ஒதப்பட்டமையை அவர் கடுமையாக கண்டித்துள்ளார்.
ஜனநாயக ஆட்சி கட்டமைப்பு மீது தாக்குதல் மேற்கொள்வது உலகளாவியரீதியில் ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பதற்கான தந்திரமாகும்.
முஸ்லிம் சமூகத்தில் ஜனநாயகத்தைப் பற்றி விமர்சிப்பவர்கள் மாத்திரமல்ல. 2018 ஜனவரி 12ஆம் தேதி ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஆத் (SLTJ) தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவாசலில் மதப் போதனை ஒன்றினைனை ஏற்பாடு செய்திருந்தது.
ஜனநாயகம் இஸ்லாமியப் போதனைகளுக்கு தவ்ஹீத் கொள்கைகளுக்கும் முரணானது என அந்நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
2017 இறுதியில் இருந்து சஹ்ரான் இந்தியாவைச் சேர்ந்த அபூஹிந்த் என்பவருக்கு சிரியாாவுடன் தொடர்பிருப்பதாக சஹ்ரான் ஹாதியாவிடம் (மனைவி) தெரிவித்திருக்கிறார்.
நெளபருக்கு அபூ ஹிந்த் தெரிந்தவர். நெளபரும் அபூ ஹிந்த்துடன் தொடர்புகளைப் பேணியுள்ளார்.
அவர்கள் திரீமா, டெலிகிராம் செயலிகள் மூலம் தமிழில் கதைத்துக் கொண்டார்கள். ஒவ்வொருவரும் குரல் பதிவுகளை அனுப்பி கொண்டார்கள். அபூ ஹிந்த் வழமையாக சஹ்ரானின் பாதுகாப்பு தொடர்பில் வினவுவார். அத்தோடு அவர், தனது மதப் போதனைகளின் குரல் பதிவுகளையும் அனுப்பி வைத்தார்.
ஒரு தடவை சிரியாவில் 15 வயதான பிள்ளை ஒன்று, மேற்கொண்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான விபரங்களை அனுப்பி வைத்தார். சஹ்ரான் கட்டார், சவுதி அரேபியாவில் உள்ளவர்களுடன் பேசுவதை வழமையாகக் கொண்டிருந்தார்.
2017 ஓகஸ் 23 ஆம் தேதி உள்ளூர் ஊடகம் ஒன்று இந்தியரான முகமட் ஷாபி அர்மார் என்று அழைக்கப்படும் யூசுப் அல் ஹிந்தி என்பவர் தொடர்பில் செய்தி ஒன்றிினை வெளியிட்டது.
அவரது பெயர் உலக தீவிரவாதிகள் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. அவர் ஐ.எஸ்.அமைப்புக்கு ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுவந்தார்.
மேலும் ஐ.எஸ். அமைப்பின் இந்திய உபகண்டத்திக்கான பிரதிநிதியாகவும் செயற்பட்டார். அத்தோடு ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து கொண்ட முதல் இந்தியர் ஆவார்.
இக்காலத்தில் 50 முஸ்லிம் இளைஞர்களை ஐ.எஸ் அமைப்புக்கு இந்தியா பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் இருந்து சேர்த்திருந்தார்.
சஹ்ரான் இலங்கையில் தாக்குதல் ஒன்றினை நடத்த வேண்டும் என2018 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தீர்மானித்தார். இதற்கான நேரடியான மற்றும் அனுமானிக்கப்பட்ட பலமான ஆதாரங்கள் உள்ளன.
இந்த தாக்குதல் மூலம் இலங்கையில் விலாயத் செய்லானி எண்ணும் உருவாக்கி அங்கு இஸ்லாமிய ஆட்சி உருவாக்க தீர்மானித்திருந்தார். இதற்கு பல காரணங்கள் எண்ணெய் வார்த்தன. முக்கிய காரணம் ஐ.ஸ் கொள்கைகளும் உலகளாவியரீதியில் நடவடிக்கைகளும் ஆகும். அடுத்து வஹாபிச கொள்கைகளும் ஆகும்.
சஹ்ரான் தன்னைப் பின்பற்றுவோரை கவர்வதற்காக கண்டி எசல பெரஹராவை தாக்கி முஸ்லிம்களுக்கும் சிங்களவர் இடையில் கலவரங்களை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்தார்.
அதனை அடுத்து போலீசாரும் பாதுகாப்பு படையினரும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும் போது பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மூலம் கிழக்கில் உள்ள போலீஸ் மற்றும் ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார்.
அத்தோடு போலீஸ் மற்றும் இராணுவ முகாம்களுக்கும் ஆயுதங்களையும் கைப்பற்ற திட்டமிடப்பட்டிருந்தது. முஸ்லிம்கள் உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவங்கள் இயக்கத்துக்கு ஆட்களைச் சேர்ப்பதற்கு சாதகமாக பயன்படுத்தப்பட்டன
இந்த இலக்கினை எய்துவதற்காக சஹ்ரான் பயிற்சி முகாம் நடத்தினார். பயிற்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு ரீ56 கைத்துப்பாக்கி மற்றும் கத்தி பாவனை தொடர்பான செயல் முறை விளக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் உளவுத்துறை சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் தம்மை அடையாளம் காணுவதை தவிர்க்கும் வகையில் சில பயிற்சிகளும் வழங்கப்பட்டன (தொடரும்)
www.newstimetamil.com






No comments