உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு அறிக்கையிலிருந்து...
சஹ்ரானினால் நடாத்தப்பட்ட முதலாவது பயிற்சி முகாமில் அதிகமானோர் கலந்து கொண்டனர்!
தொடர் - 15
(தமிழில் : ஏ.ஆர்.ஏ. பரீல்)
2018 பிப்ரவரி மாதம் 20 ஆம் திகதி தனது முகநூல் பக்கத்தில் ஜிஹாத் பற்றி வீடியோ பதிவு ஒன்றினை சஹ்ரான் பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவில் இஸ்லாத்தை உண்மையாக பின்பற்றுவார்கள் இஸ்லாத்தை பாதுகாப்பதற்காக ஏனைய சமயங்களுக்கு கீழ்ப்படியாது போராட வேண்டும் என தெரிவித்தார்.
அவர் ஐ.எஸ். அமைப்பின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் அஷ்ஷெய்க் அபூ முகம்மட் அல் அதானி அரபு மொழியில் பாடிய பாடல் ஒன்றை மேற்கோள் காட்டியிருந்தார்.
அதானி தனது பாடலில் அல்லாஹ்வுக்காக மரணிப்பது சலுகையாகும். மரணிக்கும் ஒருவரின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார்.
தனது ஆதரவாளர்களை, தன்னை பின்பற்றுபவர்களை பயங்கரவாதத்தின் பால் தூண்டுவது சஹ்ரானின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
தேர்தல் முறைமையும் பலவீனப்படுத்துவது அவர் நோக்கமாகக் கொண்டிருந்தார் முஸ்லிம்கள் தேர்தலில் வாக்களிக்க கூடாது என தெரிவித்தார். மக்கள் பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்வதற்காக வாக்களிப்பது இஸ்லாத்தின் போதனைகளுக்கு எதிரானது என தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட இந்த வீடியோ பதிவில் தெரிவித்திருந்தார்.
2018 ஜனவரி மாதம் 25ஆம் திகதி தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டார்.
ஜனநாயகத்தின் கீழ் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்படுபவர்கள் சட்டங்கள் இயற்றுவது அல்லாஹ்வை விடவும் அல்லாஹ்வின் புனித குர்ஆனையும் ஹதீஸையும் விடவும் மேலானதாக அமைந்துள்ளது. இது தவ்ஹீத் கொள்கைக்கு எதிரானது என்றார்.
சஹ்ரான் மீண்டும் 2018 பெப்ரவரி 4ஆம் திகதி வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டு தேர்தலில் வாக்களிப்பதை கண்டித்திருந்தார்.
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை வாக்களிப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது எவ்வாறு என தெரிவிக்க முடியும் என வீடியோ பதிவில் கேள்வி எழுப்பி இருந்தார்.
சஹ்ரானின் கருத்துப்படி தேர்தலில் வாக்களிப்பது இஸ்லாத்துக்கு எதிரானது ஆகும். அதன் பின்பு 2018 பிப்ரவரி 6ஆம் 7 ஆம் திகதிகளிலும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். அதில் ஜனநாயகம் தெளஹீதை மறுத்துள்ளதால், கிடைத்துள்ளதால் அதற்கு பதிலாக முஸ்லிம்கள் ஜனநாயகத்தை மறுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
2018 பிப்ரவரி மாதமளவில் தேதி நடைபெறும் உள்ளுராட்சி சபைத் தேர்தலை முஸ்லிம்கள் நிராகரிக்க வேண்டுமென சஹ்ரான் கோரிக்கை விடுத்திருந்தார்.
2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நாட்டில் அம்பாறை மற்றும் தெல்டனிய போன்ற பகுதிகளில் மீண்டும் முஸ்லிம்களுக்கும் சிங்கள சமூகத்திற்கும் இடையில் பதற்ற நிலை உருவாகியது
2018 ஆம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் அம்பாறையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றினை அடுத்து நாட்டின் சில பகுதிகளில் முஸ்லிம்களுக்கும் சிங்களவருக்கும் இடையில் மீண்டும் பதற்ற நிலை உருவானது.
திகன வீதியில் பெப்ரவரி 22ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து அங்கு பாரிய வன்செயல் உருவாகின.
இக்கலவரம் நிலமையை முடிந்தளவு பயன்படுத்தி அதிருப்தியில் உள்ள முஸ்லிம் இளைஞர்களை தமது அமைப்பினால் கவரச் செய்வதற்கான தேவை இருந்தது.
அதனால் 2018 மார்ச் 5ஆம் தேதி தனது முகநூலில் திகன மற்றும் தெல்தெனிய சம்பவங்களை பதிவு செய்தார்.
முஸ்லிம்களை ஆயுதம் ஏந்துமாறு அவர் கோரிக்கை விடுத்தார். முஸ்லிம்களுக்கு எதிராக சண்டை இடுபர்வர்கள் மீது தாக்குதல் நடாத்தி கொலை தாக்குதல் நடத்தி கொலை செய்யுங்கள் என்றும் கூறினார்.
முஸ்லீம்கள் அல்லாதவர்கள் உடன் இஸ்லாத்தினால் சமாதானமாக நல்லிணக்கத்தை பேண முடியாது எனவும் தெரிவித்தார். மேலும் அவர் தனது வீடியோ பதிவில் முஸ்லிம்களுக்கு சேதம் விளைவித்தவர்கள் பழிவாங்கப்படுவர் என்றும் ஜிஹாத் பற்றியும அவர் கூறியிருந்தார்
சஹ்ரானின் இந்த முயற்சி ஓரளவு வெற்றி பெற்றது. திகன சம்பவத்தின் பின்பு சாதிக், சஹ்ராானுடன் தொடர்பினை ஏற்படுத்தி தான் ஐ.எஸ்.ஸின் கொள்கைக்கு அமைவாக செயல்படுவதாக தெரிவித்தார்.
எனினும் சஹ்ரானுடன் இணைவதற்கு முன்னரே சாதிக் தனது வட்டத்திலிருந்தவர்களுக்கு பயிற்சி முகாம்களை நடத்தி உள்ளார்.
2017 நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் பயிற்சி முகாம்கள் தோப்பூர், நல்லூர், மூதூர் பகுதிகளில் சாதிக்கினால் நடத்தப்பட்டுள்ளன.
இப் பயிற்சி முகாம்களில் சுமார் 6 பேரளவில் கலந்து கொண்டுள்ளனர். இந்த பயிற்சி முகாமில் சஹ்ரான் பங்கு கொண்டதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை.
சாதிக்கினால் ரீ 56 ஆயுதம் உபயோகம் பற்றி பயிற்சி வழங்கப்பட்டது. இது ஒரு நாள் பயிற்சி முகாம் ஆகும். முகாம் நடத்தப்பட்ட வீடு சாதிக்கின் நண்பரான ஹாஜா மொகைதீனுக்கு சொந்தமானதாகும்.
திகன கலவரத்திற்கு பின்பு சஹ்ரானினால் நடத்தப்பட்ட முதலாவது பயிற்சிமுகாம் அதிக எண்ணிக்கையானோரைக் கவர்ந்திருந்தது.
இந்த பயிற்சி முகாமில் முன்பு நடத்தப்பட்ட பயிற்சி முகாம்களை விடவும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி முகாம் 2018 மார்ச் 23 முதல் 25 ஆம் திகதி வரை இல. 147/ 7/A , தர்மாசோக மாவத்தை, லேவெல்ல, கண்டி என்ற விலாசத்தில் அமைந்துள்ள என்றிச் என்னும் பங்களாவில் நடைபெற்றது.
இதில் சுமார் 25 பேர் கலந்து கொண்டனர். இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் ஐ.எஸ். அதன் செயல்பாடுகள் பற்றி விரிவாக நடத்தப்பட்டது விரிவுரைகளை நடத்தினர். சஹ்ரானும் நெளபரும் விரிவுரைகளை நடாத்தினர்..
மில்ஹான் ரீ56 ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் பயிற்சிகளை வழங்கினார். பயிற்சிக்கு இரண்டு ரீ 56 ஆயுதங்கள் உபயோகிக்கப்பட்டன.
இப்பயிற்சியின் போது பாதுகாப்பு படையினர் மற்றும் உளவுப் பிரிவினர் அறிந்து கொள்ளாத வகையில் கையடக்க தொலைபேசிக்கு எவ்வாறு VPN பயன்படுத்தலாம் என்பதை ஹஸ்தூன் விளக்கினார்.
தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாது சிம் அட்டைகளைப் பெற்று உபயோகிக்கப்படுத்துமாறு கலந்து கொண்டோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. (தொடரும்)
www.newstimetamil






No comments