இரட்டைச் சதம் அடித்து புதிய சாதனையை நிலை நாட்டிய மூதூர் மாணவன்.
இலங்கை பாடசாலை கிரிக்கெட் ஒன்றியத்தால் நடாத்தப்பட்டு வரும் 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட 19 வயதுக்கிடையிலான பாடசாலை மட்ட கிரிக்கெட் போட்டியில் 128 பந்துகளை சந்தித்து 220 எனும் இமாலய ஓட்டங்களைப்பெற்று கிழக்கு மாகாண புதிய சாதனையை நிலைநாட்டி மூதூர் மத்திய கல்லூரிக்கும், திருகோணமலை மாவட்டத்திற்கும், மூதூரைச் சேர்ந்த உனைஸ் முஹமட் நுபைல் பெருமையைத் தேடிக் கொடுத்துள்ளார்.
மூதூர் மத்திய கல்லூரிக்கும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரிகளுக்குமிடையிலான போட்டி இன்றைய தினம் மூதூர் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றபோதே இவ்வரலாற்றுச் சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
இவர் எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து பிரகாசிக்க வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
www.newstimetamil.com






No comments