உள்நாட்டு வேளான்மையை மேம்படுத்த விசேட திட்டம்
மாற்று கடன் பொறிமுறை ஊடாக உள்நாட்டு வேளான்மையை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்!
மக்களின் வாழ்வாதரத்தை முன்னேற்றும் நோக்கோடு இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகப்படத்தப்படும் மாற்று கடன் பொறிமுறை ஊடாக உள்நாட்டு வேளான்மையை மேம்படுத்தல் தொடர்பான அறிமுகக் கலந்துரையாடலானது மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் நேற்று (21) காலை 10.00மணிக்கு இடம்பெற்றது.
இச் செயற்றிட்டம் வங்கிகள் செல்ல முடியாத இடங்களிற்கு சேவைகளை விரிவுபடுத்தல், நுண்கடன்களின் தாக்கத்தை குறைத்தல், இயற்கை வளப்பன்பாடுடனான கிராமங்களை பல்துறை சார்ந்து பசுமைப் படுத்தல், இலகு கடன்களை வழங்கல் ஆகிய நோக்கங்களை கொண்டுள்ளது.
வங்கிகள் செல்ல முடியாத இடங்களை அடையாளப்படுத்தி தருமாறு இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய முகாமையாளர் இதன்போது கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மத்திய வங்கியின் பிராந்திய முகாமையாளர், முகாமையாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், சமுர்த்திப் பணிப்பாளர், இத் துறை சார் திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.








No comments