ரிஷாட் பதியுதீன் கைது
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் இன்று (24) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
2019 ஏப்ரல் 21 இடம்பெற்ற தாக்குதல்தாரிகளுக்கு உதவியமை மற்றும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியமை தொடர்பில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள, இல்லத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், கைதுசெய்யப்பட்டார்.
வெள்ளவத்தை பகுதியில் வைத்து ரியாஜ் பதியுதீன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்கள் தொடர்பில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட சந்தேக நபர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் இது தொடர்பில், தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






No comments