மேலதிக அரசாங்க அதிபராக கடமையேற்றார்!
திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக(காணி) பி.ஆர்.ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர் தம் கடமைகளை கடந்த 28 ம் திகதி மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இலங்கை நிருவாக சேவையின் முதலாம் வகுப்பு உத்தியோகத்தரான இவர் 2006 ம் ஆண்டு திறந்த போட்டிப்பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டார்.
திம்புலாகலை, நொச்சியாகம உதவி பிரதேச செயலாளர், கெப்பிதிகொள்ளாவ, சேருவில பிரதேச செயலாளர் ஆகிய பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக (காணி) கடமையாற்றும் அதேவேளை இவர் சேருவல பதில் கடமை பிரதேச செயலாளராகவும் கடமையாற்றுவார். www.newstimetamil.com






No comments