Breaking News

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் காலமானார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட்டார சபைத் தேர்தலில் போட்டியிட்டவர் காலமானார்.

(ஹலால்தீன் கிண்ணியா)

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா நகரசபைத் தேர்தலில் பைசல் நகர் வட்டாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட எம்.சி. மஹ்ருப் தனது(57) ஆவது வயதில் இன்று காலை 7.00 மணியளவில் மாரடைப்புக் காரணமாக காலமானார்.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான இவர் 2018.02.10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி வட்டாரத் தேர்தல் போட்டியிட்டு 423 வாக்குகளைப் பெற்றார்

ஒரு சில வாக்குகள் வித்தியாசத்தில் தனது ஆசனத்தை இழந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கிண்ணியா நகர சபைக்கு போட்டியிட்ட ஒரேயொரு முஸ்லிம் வேட்பாளர் ஆவார்

சமூக சேவைப் பணிகளில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் கண்டலடியூற்று காதிரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவராகவும் கடமையாற்றி வந்தார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் கூபா பள்ளி மைய வாடியில் இன்று1.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது


No comments