சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதோருக்கு அன்டிஜன் பரிசோதனை!
மட்டக்களப்பு அரசடி சந்தியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதோருக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளைப் பேணாதவர்களை அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு நகருக்குள் வருவோரும் செல்வோரும் சுகாதார நடைமுறைகளைப்பேணும் வகையில் இறுக்கமான கட்டளைகளை சுகாதார பிரிவினரும் பொலிஸாரும் வழங்கிவரும் நிலையில் அவற்றினை உதாசீனம் செயற்பாடுகளை சிலர் மேற்கொண்டுவருகின்றனர்.
இதனை கருத்திக்கொண்டு முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் முககவசங்களை சரியான முறையாக அணியாதவர்கள் இன்று அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டனர். இன்றைய தினம் மட்டக்களப்பு நகரில் உள்ள வங்கிகளில் கடமையாற்றும் வங்கி உத்தியோகத்தர்கள் அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டனர்.
மட்டக்களப்பு அரசடி சந்தியில் இந்த பரிசோதனைகளை மட்டக்களப்பு சுகாதார திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வீதி சோதனைகளை மேற்கொண்ட பொலிஸாரும் சுகாதார பிரிவினரும் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் முககவசங்களை சரியான முறையாக அணியாதவர்கள் அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தினர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸாரும் சுகாதார பிரிவினரும் இணைந்து சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கச்செய்யும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது







No comments