உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு அறிக்கையிலிருந்து ...
சஹ்ரான் நடாத்திய பயிற்சி முகாம்கள்
தொடர் - 16
தமிழில் : ஏ.ஆர்.ஏ. பரீல்
இதற்கடுத்து நடைபெற்ற பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
3 பயிற்சி முகாம்கள் நடாத்தப்பட்டன. சாந்திபுரம், நுவரெலியா என்னும் இடத்தில் அமைந்துள்ள தக்சிலா ஹொலிடே ரேஸ்டூரன்டில் நடைபெற்ற பயிற்சி முகாமில்
15 - 20 இடையிலான எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சி முகாம் 30. 3. 2018 முதல் 1.4. 2018 வரை நடைபெற்றது.
4.5.2018 முதல் 6.5. 2018 வரை நடைபெற்ற பயிற்சி முகாமில் சுமார் 30 தொடக்கம் 35 வரையிலான எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.
7. 5. 2018 முதல் 8.5.2018 வரை நடைபெற்ற நடைபெற்ற முகாமில் சுமார் 25 - 30 வரையிலான எண்ணிக்கையானோரும் கலந்துகொண்டனர். இங்கும் தீவிரவாத விரிவுரைகள் சஹ்ரான் மற்று நெளபரினாலும் நடாத்தப்பட்டன.
ரீ 56 ரக துப்பாக்கி மற்றும் கைதுப்பாக்கியை இயக்குவது பற்றி செயன்முறை ரீதியாக விளக்கினர். குண்டுகளைத் தயாரிப்பது பற்றி முகமது ஹஸ்தூன் விளக்கினார்.
தனது விரிவுரைகளில் முஸ்லிம் இளைஞர்களை கவரும் வகையிலான உதாரணங்களை சஹ்ரான் கையாண்டார். முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்களினால் ஆத்திரம் அடைந்துள்ள இளைஞர்களைக் கவரும் வகையில் அமைந்திருந்தது.
அவரது விரிவுரைகள் மியான்மார் சம்பவங்கள் மற்றும் Aum Shinrikyo என்னும் பெயருடைய ஜப்பான் பௌத்த தீவிரவாத அமைப்புகள் பற்றியதாக இருந்தது.
இவை பற்றி சஹ்ரான் தனது முகநூல் பக்கத்தில் கட்டுரை எழுதியிருந்தார். உளவுப் பிரிவு அதிகாரிகள் இந்த கட்டுரை தொடர்பில் தனக்கு எதிராக விசாரணை நடத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும் கலகொட அத்தே ஞானசார தேரர் மியன்மாரைச் சேர்ந்த மதகுரு ஒருவரை சந்தித்ததுடன் ஜப்பானுக்கும் சென்றுள்ளார். ஜப்பானில் அவர் Aum Shinrikyo
மேலும் கலகொட அத்தே ஞானசார தேரர் மியன்மாரைச் சேர்ந்த மதகுரு ஒருவரை சந்தித்ததுடன் ஜப்பானுக்கும் சென்றுள்ளார். ஜப்பானில் அவர் Aum Shinrikyo
அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்திருக்கலாம்.. இந்த விடயங்கள் முஸ்லிம்களுக்கு மிகவும் பாதிப்பை கொண்டுவரும் என்று சஹ்ரான் பிரச்சாரம் செய்தார்.
2018 மே மாதம் ரமலான் காலப்பகுதியில் சஹ்ரான்
பிரசாரமொன்றினை முன்னெடுத்தார். ஜிஹாத் றமழான் மாதத்தோடு தொடர்புபட்டது என முஸ்லிம்கள் நம்ப கூடியதாக இந்த பிரச்சாரம் இருந்தது.
2018 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் 18ஆம் திகதிகளில் சஹ்ரான் தனது முகநூலில் வீடியோ பதிவு ஒன்றினை பதிவேற்றியுள்ளார். அதில் முஜாஹிதீன் மற்றும் ஜிஹாத் பற்றி பேசியிருந்தார்.
2018 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் 18ஆம் திகதிகளில் சஹ்ரான் தனது முகநூலில் வீடியோ பதிவு ஒன்றினை பதிவேற்றியுள்ளார். அதில் முஜாஹிதீன் மற்றும் ஜிஹாத் பற்றி பேசியிருந்தார்.
முஜாஹிதீன்கள் ஆயுதமேந்தி முஸ்லிமல்லாதவர்கள் உடன் போரிடு Uவர்கள். மற்றும் ஜிகாத் என்பது ஒருவர் தனது வாழ்க்கை அல்லாஹ்வுக்காக வாழ்வதும் தியாகம் செய்வதும் ஆகும்.
குறுகிய வழியில் சுவர்க்கம் செல்வதற்கு ஜிஹாத் செய்வது ஒரு வழியாகும். இது அல்லாஹ்வின் அரசை நிறுவுவது ஆகும் என சஹ்ரான் தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அல் பக்தாதி நாள் எழுதப்பட்டு Messanger of Allah, Leader of war எனும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை நூல் இலங்கையில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் மட்டும் அரபுக் கல்லூரிகளில் போதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2012 மே மாதம் 22ஆம் தேதி சஹ்ரான் புனிதப் போரை நடத்துவதற்கு தயங்க வேண்டாம் எனும் தலைப்பில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். தமது வாழ்நாளில் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு சுவர்க்கம் செல்வதற்கான வழி ஜிஹாத் ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 2018 மே மாதம் 27ஆம் தேதி ரமலான் மாதத்தின் முக்கியத்துவம் பற்றி சஹ்ரான் வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். நபி நாயகம் தனது வாழ் நாளில் 73 போர்களை நடாத்தியுள்ளார். இவற்றில் 11 போர்கள் றமலான் மாதத்தில் நடாத்தப்பட்டன.
குறுகிய வழியில் சுவர்க்கத்துக்கு செல்ல வேண்டுமென்றால் முஸ்லிமல்லாதவர்கள் மீது புனித போரான ஜிஹாதை ரமலான் மாதத்தில் முன்னெடுக்கவேண்டும். இதனை முஸ்லிம் இளைஞர்கள் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் தனது வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்
2018 ஜூன் மாதத்தில் சஹ்ரான் ஐ.எஸ் அமைப்பின் செயற்பாடுகளை நியாயப்படுத்தியதுடன் துருக்கி ஜனாதிபதி ராசெப் தையிப் அர்துகானின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டார்.
இந்த மாதத்தை சூபிச சமுகத்தை
இலக்கு வைத்து ஆரம்பித்தார். 2018 ஜூன் மாதம் 1ஆம் தேதி சஹ்ரான் தனது முகநூலில் கடிதம் ஒன்றை பதிவிட்டார். முகநூல் பதிவில் முஸ்லிம்கள் சில குழுவினர் அடக்க ஸ்தலங்களை வழிபடுகின்றனர். அவர்கள் அரசியல்வாதிகளின் பாதுகாப்பை பெற்றுக் கொள்வதுடன் இஸ்லாத்தை அழிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த குழுவினர் இத்திஹாத் அஹ்லுல் சுன்னத்துல் வல் ஜமாத், சூபிகள் என்றும் அவர்கள் வஹாபிகளினதும் தெளஹீத் ஜமா ஆத்தினதும் செயற்பாடுகளுக்கு இணங்க முடியாமையினாலே இவ்வாறு செய்கின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
2018 ஜூன் மாதம் 17ஆம் தேதி அவர் தனது முகநூலில் வீடியோவை பதிவேற்றம் செய்தார். இஸ்லாமியர் இராஜ்ஜியத்தை அவதூறு செய்பவர்கள் கட்டாயமாக அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் அந்த வீடு அமைந்திருந்தது.

அவர் ஐ.எஸ் இன் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியதுடன் ஐ.எஸ்.ஐ எதிரிக்கும் மெளலவிகளுக்கு எதிராக அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தது.
அபூபக்கர் அல்-பாக்தாதி புனித குர்ஆனை பத்து வெவ்வேறான வகையில் விளக்கியிருக்கிறார். பெரும்பான்மையான முஸ்லிம்கள் அவரை இஸ்லாத்தின் தலைவராக (கலீபா) ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என கூறியுள்ளார்.
இதனையடுத்து ஐ.எஸ்.இன் நடவடிக்கைகளை புகழ்ந்து 2018 ஜூன் 21, 24-ஆம் தேதிகளில் கடிதங்கள் வெளியிட்டார். ஐ.எஸ்.இன் ஜிஹாத் போர் சரியானது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே தினம் ஸஹரான் தனது முகநூல் மேலும் ஒரு கடிதம் ஒன்றினை பதவிட்டார். துருக்கி தேர்தலில் வெற்றியீட்டியமை முழு முஸ்லிம் உலகமும் வெற்றி கொண்டதாக இல்லை.
அதே தினம் ஸஹரான் தனது முகநூல் மேலும் ஒரு கடிதம் ஒன்றினை பதவிட்டார். துருக்கி தேர்தலில் வெற்றியீட்டியமை முழு முஸ்லிம் உலகமும் வெற்றி கொண்டதாக இல்லை.
ஏனென்றால் அது மேற்குலகின் நிகழ்ச்சி நிரலாகும். அபூபக்கர் அல் பக்தாதினால் இஸ்லாமியத்தை சரியான முறையில் அமைக்க முடியும் என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இலங்கையின் பாதுகாப்பு பிரிவினர் ஒரு ஆபத்தான நிலைமை கவனத்திற்கொள்ள வேண்டும். ஹிஸ்ப் - தஹ்ரீர் எனும் அமைப்பு ஒன்று துருக்கியில் இயங்கி வருகிறது. அப் வமைப்பு 2024 இல்இஸ்லாமிய ராஜ்யத்தை நிறுவதாக பிரகடனம் செய்துள்ளது.
நூறு வருடங்களுக்கு முன்பு வீழ்ச்சியடைந்த இஸ்லாமிய ராஜ்ஜியத்தை மீள நிறுவுவதாக பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்த அமைப்பு 1953 காலத்தில் தக்கி யுத்தீன் அல் நப்ஹானி எனும் பலஸ்தீனரால் இஸ்லாமிய ராஜ்ஜியம் ஒன்றை நிறுவம் நோக்கோடு அமைக்கப்பட்டது.
இந்த அமைப்பின் இந்தோனேசியா கிளை 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 தேதி தடைசெய்யப்பட்டது. இந்த அமைப்பு இலங்கையிலும் ஏறாவூர், வாழைச்சேனை, ஓட்டமாவடி காத்தான்குடி, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் இயங்கி வருகிறது.
2018 ஜூலையில் ஸஹ்ரான் தொடர்ந்தும் ஐ.எஸ். இன் கொள்கைகளை நியாயப்படுத்த அதன் நடவடிக்கைகளை வியாபிக்க செய்தார். 2018 ஜூலை 4 ஆம் திகதி சஹ்ரான் தனது டெலிகிராம் கணக்கில் அபூபக்கர் அல் பக்தாதி நடவடிக்கைகளைப் பாராட்டி கடிதம் ஒன்றினை வெளியிட்டார்.

அல் பக்தாதி தனது மகனை போரிடுவதற்கு அனுப்பி வைத்தமை முஸ்லிம் தலைவர்களுக்கு முன்னுதாரணம் ஆகும் எனவும் கூறியிருந்தார்.
இதன்பின்பு அவர் வீடியோ ஒன்றை பதிவிட்டார். முஸ்லிம்கள் கட்டாயமாக ஜிஹாத் போரில் ஈடுபடவேண்டும். ஐஎஸ்.ஐ பற்றி விமர்சிக்கும் முஸ்லிம் தலைவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும் என்று அறிவித்திருந்தார்.
மேலும் 2018 ஜூலை 30 திகதியும் வீடியோ பதிவு ஒன்றினையும் பதிவேற்றிகுந்தார்.
ஜிஹாத்தில் ஈடுபடுவதற்காக ஆயுதங்களை ஏந்துமாறு அல்லாஹ் நபிகள் நாயகத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளான். இது அனைத்து முஸ்லிம்களின் கடமையாகும் என்றாலும் தற்போதைய முஸ்லிம் தலைவர்கள் இதனை மறுத்துள்ளனர் எனவும் வீடியோ பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஹ்ரானின் பிரச்சார திட்டம் மிகுந்த பிரதி பலனை அளித்தது. இதனால் வெற்றிகரமாக ஹம்பாந்தோட்டை சிப்பிக்குளம் பகுதியில் ஜூலை 7ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையும் ஜூலை 20-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரையும் வெற்றிிகரமாக பயிற்சி முகாம்கள் நடாத்தப்பட்டன.

ஜூலை 7 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரைவும் சஹ்ரானினால் நடாத்தப்பட்ட பயிற்சி முகாமில் சுமார் 25 க்கும் 30க்கும் இடையிலான எண்ணிக்கையான கலந்து கொண்டனர்.
ரீ 56 துப்பாக்கியை இயக்குவது பற்றி மில்கானினால் பயிற்சி வழங்கப்பட்டது. குண்டுகள் தயாரிப்பது தொடர்பான பயிற்சிகள் ரில்வானினால் வழங்கப்பட்டது.
ரீ 56 துப்பாக்கியை இயக்குவது பற்றி மில்கானினால் பயிற்சி வழங்கப்பட்டது. குண்டுகள் தயாரிப்பது தொடர்பான பயிற்சிகள் ரில்வானினால் வழங்கப்பட்டது.
சஹ்ரான் தீவிரவாத விரிவுரை காள நிகழ்த்திய அதேவேளை நெளபர் ஐ.எஸ்.பற்றி விரிவுகைள் வழங்கினர்.
இந்த வளாகத்தில் அடுத்த பயிற்சி முகாம் ஜூலை 20ஆம் திகதி க்கும் 22 க்கும் இடையில் நடைபெற்றது. இப்பயிற்சிகளில் சுமார் 25க்கும் 30க்கும் இடையிலான எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.
இந்த வளாகத்தில் அடுத்த பயிற்சி முகாம் ஜூலை 20ஆம் திகதி க்கும் 22 க்கும் இடையில் நடைபெற்றது. இப்பயிற்சிகளில் சுமார் 25க்கும் 30க்கும் இடையிலான எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.
முன்னைய பயிற்சி முகாமில் போன்றே இங்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சி முகாமில் சஹ்ரான், ஹஸ்துன், இல்ஹாம் அகமட் ஆகியோரும் கலந்துகொண்டனர். (தொடரும்)

No comments