திருகோணமலையில் கொவிட் மரணம்!!
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட வயோதிபர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில், காய்ச்சல், மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட வயோதிபர் இன்று (30) அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை-கந்தசாமி கோயில் வீதியைச்சேர்ந்த 75 வயதையுடையவர் என தெரியவருகின்றது.
இதேவேளை தந்தை இந்த குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு பெறப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் மகன் திருகோணமலையில் உள்ள பிரபல சீமெந்து தொழிற்சாலையில் கடமையாற்றி வருகின்றவராவார்.
குறித்த சீமெந்து தொழிற்சாலையில் அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் கடந்த சில தினங்களாக இனங்காணப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சீமெந்து தொழிற்சாலையில் கடமையாற்றி வந்தவர்களுக்கு சிறந்த முறையில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத் திணைக்களம் கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் பாலையூற்று மற்றும் பூம்புகார் பகுதிகளில் சீமெந்து தொழிற்சாலையில் கடமையாற்றி வந்தவர்களுக்கே அதிக அளவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.www.newstimetamil.com






No comments