Breaking News

புர்கா தடையை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவது அது அவர்களது உரிமை, ஜன­நா­யக நாட்டில் ஒருவர் விரும்பியவாறு உடையணி­வது அவ­ருக்­குள்ள மனித உரிமையாகும் என முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொது செயலாளர் எம்.ஆர்.பைசால் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் பெண்களின் புர்க்கா ஆடையை தடை செய்யும் அமைச்சரவை அங்கிகாரம் குறித்து, அவர், இன்று (30) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

ஜன­நா­யக நாட்டில் எமது ஆடையை எமக்கு விரும்­பி­ய­வாறு சுழற்­று­வ­தற்கு உரிமை உண்டு. ஆனால் அது அடுத்­த­வரின் முகத்தில் பட்டு காயங்­களை ஏற்­ப­டுத்­தி­வி­டக்­கூ­டாது. 

மேலும் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் சில சூழ்நிலைகளில் அதாவது அந்நிய ஆண்களுக்கு மத்தியில் மோசமான எண்ணங்கள் மற்றும் காம நோய்யுள்ள உள்ளங்களைக் கொண்ட சில ஆண்களிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக பெண்கள் முகத்தை மறைக்கும் அவசியமிருப்பதால், அதனை, சந்தர்ப்ப பேணுதல் முறைையாக கடைப்பிடித்து வருகிறார்கள்.

இந்த ஆடை பழக்கம் பெண்கள், ஆண்கள் இரு சாராருக்கும் நல்லதாகும். இதன் காரணமாக சூழ்நிலைகள் என்று வரும்போது அதனை செய்வது ஒரு பாவமான காரியமாகவோ அல்லது அசிங்கமான பண்பாட்டுக்குரிய அடையாளமாகவோ இருக்க முடியாது.

எனவேதான், ஒரு வளர்ச்சியடைந்த சமூக கட்டமைப்பின் சிறந்த பண்பாட்டு சூழலியலுக்குரிய ஓர் ஆடையாக இதை அணிகின்ற முஸ்லிம் பெண்கள் கருத்துகின்ற போது, அரசாங்கம் அதற்கு தடை விதிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்தார். www.newstimetamil.com


No comments