Breaking News

மகளிர் தின கொண்டாட்டமும் சித்திரக் கண்காட்சியும்

 

தம்பலகாம பிரதேச செயலகம் மற்றும் தம்பலகாம பிரதேச மகளிர் செயலணி இணைந்து நடாத்திய மகளிர் தின கொண்டாட்டமும் சித்திரக் கண்காட்சியும்  செவ்வாய்கிழமை (6) செயலக கேட்போர்கூடத்தில் மிகக்கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிறுவர் நன்நடத்தை திணைக்கள ஆணையாளர் றிஸ்வானி றிபாஸ் அவர்காளும் சிறப்பு அதிதியாக RECDO நிறுவனத் தலைவர் ஜே.எம்.அஷார் மற்றும் இலங்கை வங்கி தம்பலகாம முகாமையாளர் உட்பட RECDO திட்ட முகாமையாளர் ஏ.எஸ்.எம்.தாணீஸ் அவர்களுடன் அல் வபா பவுண்டேஷன் தலைவர் முவாசீர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் தம்பலகாம பிரதேச பாடசாலைகளுக்கிடையில் இல்லத்து வன்முறை,சிறுவர் துஷ்பிரயோகம் எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பணப்பரிசில்களும்,சான்றிதழ்களும் வழங்கி முறையே முதலாமிடம் -10000/-,இரண்டாமிடம் -7500/-,மூன்றாமிடம் -5000/- பெற்ற மாணவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டன. மேலும் பங்குபற்றிய 200மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.


அதேவேளை மாவட்ட ரீதியில் சிறப்பாக இயங்கியமைக்காக தெரிவு செய்யப்பட்ட மகளிர் சங்கங்களான திலின துரு மகளிர் சங்கம்,எக்கமுத்து மகளிர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

பிரதேச மட்டத்தில் நடாத்தப்பட்ட சிறந்த பெண் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் கௌரவிக்கப்பட்டதோடு,சிரேஷ்ட்ட உறுப்பினர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.

No comments