Breaking News

மூதூரில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம்


இன்று எமது மூதூர்  பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எம்.பி.எம் முபாறக்  தலைமையில்  சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டமும் சித்திரப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் சிறப்பாக நடந்தேறியது.

இந்நிகழ்வில் பிரதேச செயலகத்தினுடைய பதவி நிலை உத்தியோகத்தர்கள், மூதூர் பிரதேச சபை செயலாளர் வி. சத்தியசோதி,  றெக்டோ நிறுவன பணிப்பாளர் ஜே.எம். அஷார்,  மூதூர் தள வைத்தியசாலையினுடைய நிர்வாக உத்தியோகத்தர்,  இலங்கை வங்கி - மூதூர் முகாமையாளர்,  ஆசிரியர்கள், மாணவர்கள், பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ஏனைய  உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும், நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments