கிண்ணியாவில் மேலும் ஐவருக்கு கொரோனா!
கிண்ணியாவில் மேலும் ஐவருக்கு கொரோனா!
(கியாஸ் ஷாபி)
கிண்ணியா சுகாதார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் நேற்று (26) 5 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்
கிண்ணியா மாஞ்சோலைச் சேனை கிராம சேவகர் பிரிவு, அண்ணல் விதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரும் மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவு, அகமட் ஒழுங்கையைச் சேர்ந்த சீனக்குடா சீமெந்து தொழிற்சாலை ஊழியர் ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும் பெரிய கிண்ணியா கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த, ஒரு தாயும் மகளும் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றும் ஒருவரது நெருங்கிய உறவினர்களாகும். குறித்த பொலிஸ் உத்தியோகத்தரும் சம்பூரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்றாளராக இனங்காணப்பட்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
அவர், மேலும் இது பற்றி கூறுகையில்,
இதேவேளை, நேற்று (26) கிண்ணியா தள வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்த 5 பேர் அன்டிஜென் பரிசோதனையின் மூலம் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதில் நால்வர் கிண்ணியா சுகாதாரப் பிரிவுக்குட்படாத சீனக்குடா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் மற்றையவர் எமது சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த றஹ்மானியா கிராம சேவகர் பகுதியில் உள்ள 53 வயதான பெண் என்றும் தெரிவித்த அவர், கொரோனாவின் 2வது அலைக்குப் பின்னர் கிண்ணியா சுகாதாரப் பிரிவில் மொத்தமாக 134 பேர் கொவிட் - 19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் மரணமடைந்திருக்கிறார் என்றும் தெரிவித்தார்.






No comments