வலயக் கல்வி அலுவலகத்தின் சேவைகளைப் பெறுவதற்கு விசேட ஏற்பாடுகள்!
திருகோணமலை வலயக் கல்வி பணிமனையின் சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்கான ஏற்பாடுகள்.
(கியாஸ் ஷாபி)
கொவிட் - 19 சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில், திருகோணமலை வலயக்கல்வி பணிமனையில், வலயக் கல்விப்பணிப்பாளர் எஸ். ஸ்ரீதரனின் வழிகாட்டலின் கீழ், பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருகோணமலை வலயக் கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட சகல பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சேவையை நாடி வருவோருக்கு வலயக் கல்வி அலுவலகத்தின் சேவையை உயர்ந்த அளவில் பெற்றுக் கொடுப்பதற்கும், தங்கு தடையின்றி வழங்குவதற்கும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் காரியாலய அனைத்து கிளைத்தலைவர்களையும் காரியாலய வரவேற்பறையில் சேவை நாடி வருவோர் தொடர்புகொள்வதற்காக சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக தொடர்பாடல் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
ஏதும் தேவை நிமிர்த்தம் வலயக் கல்வி அலுவலகத்துக்கு வருவோர் வேறு எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக வரவேற்பறைக்கே உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வருகை தந்து அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனையோர்களும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாணவர்கள் வீட்டிலிருந்தவாரே தமது பாட ஆசிரியர்களின் வழிநடாத்தலில் உகந்த வழிமுறைகளூடாக தமது பாடவேளைக் கற்றல் நடவடிக்கையினை தொடர்ந்து மேற்கொண்டு செல்லுமாறும் வலயக்கல்வி பணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.








No comments