நீங்கள் மாட்டு இறைச்சி பிரியர்களா?
நீங்கள் மாட்டு இறைச்சி பிரியர்களா?
இதை கட்டாயம் படியுங்கள்!
மாட்டிறைச்சியின் தீமைகள்:
அசைவ உணவுகளில் ஒன்றான மாட்டுக் கறியில், புரோட்டீன் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகம் உள்ளன. அதேசமயம், கொலஸ்டிராலும் நிறைய உள்ளது.
மாட்டுக்கறியை அதிகமாக உண்பதால் நமது வாழ்நாள் குறையும் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவு மாட்டுக்கறியை உண்பதால் இதய நோய் வருமாம். ஏனெனில் அந்த இறைச்சியில் அதிகமான அளவு கொழுப்புகள் நிறைந்துள்ளது.
அதனால் நாடி, நாளங்களில் செல்லும் இரத்தத்தின் அளவு குறைவதோடு, வீரியம் குறைந்து நாள்பட்ட நோயையும் ஏற்படுத்தும்.
அதேசமயம், மற்ற இறைச்சிகளைப் போல இதையும் அளவோடு எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள்.
அரிசி, வெண்ணெய், சீஸ் போன்றவற்றில் கூட கொழுப்புகள் உள்ளன. இருப்பினும் அவற்றை எவ்வாறு சாப்பிடுகிறோமோ, அது போலவே அந்த மாட்டுக்கறியையும் அளவோடு உண்ண வேண்டும்.
ஏனெனில் மிருகத்தின் கொழுப்பானது நாடி, நாளங்களில் தங்கி, இரத்த ஒட்டத்தை தடுக்கும். அதனால் மாரடைப்புகள் கூட ஏற்படும்.
மாட்டுக்கறியில் உள்ள கார்சினோஜென், புற்றுநோயை ஏற்படுத்தும் பொருள். ஆகவே அளவுக்கு அதிகமாக மாட்டுக்கறியை உண்டால் உடலில் கார்சினோஜென்னின் அளவு அதிகரிக்கும்.
மாட்டுக்கறியில் கலோரி அதிகமாக உள்ளது. ஆகவே இவற்றை அதிகமாக உண்டால் உடலானது அதிக எடைகூடும் வாய்ப்பு உள்ளது.
மாட்டிறைச்சியின் நன்மைகள்:
மாட்டுக்கறியில் அனைத்து விதமான சத்துக்களும் அடர்த்தியாக நிறைந்துள்ளன.
அதிக அளவு சத்துக் களை கொடுத்தாலும் குறைந்த அளவு கலோரிகள் தான் அளிக்கிறது. 100 கிராம் மாட்டுக்கறியில் 254 கலோரிகள் தான் உள்ளன. மாட்டுக்கறியை தினமும் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும்.
தானியங்களில் கிடைக்கும் ஸின்க், மெக்னீசியம், இரும்பு சத்துக்களை விட சிவப்பு இறைச்சிகளில் கிடைக்கும் சத்துக்களை நமது உடல் எளிதாக முழுமையாக உறிஞ்சிக் கொள்கிறது.
குறைந்த அளவு சாப்பிட்டு வந்தாலும் சத்துக் குறைவினை குறைக்கலாம். குழந்தை சத்துக் குறைவில் முன்னிலையில் இருக்கும்.
நம் நாட்டிற்கு அவசியமானது மாட்டிறைச்சி. ஆரோக்கியமான நரம்பு மண்டலத்திற்கும், இரத்தத்திற்கும் விட்டமின் பி12 அவசியம். வைட்டமின் பி12 அசைவ உணவில் மட்டுமே உள்ளது.
அதிலும் மாட்டுக்கறியில் விட்டமின் பி12 என்பது 37% நிரம்பியுள்ளது. மேலும் மனநோய்களை தவிர்க்கவும், கிழட்டுத் தன்மை மற்றும் மலட்டுத் தன்மையை குறைப்பதிற்கும் வைட்டமின் பி12 அவசியம். விட்டமின் பி12 சிவப்பு இறைச்சிகளில் நிரம்பியுள்ளது.
மனித இனம் தொன்று தொட்டு மாட்டிறைச்சியை சாப்பிட்டு வருவ தால் பரிணாம வளர்ச்சிக்கு உதவியது என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.
www.newstimetamil.com






No comments