Breaking News

கிண்ணியாவில் ஒரு வயது குழந்தை உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று!

 

கிண்ணியாவில் ஒரு வயது குழந்தை உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று!

(கியாஸ் ஷாபி) 

கிண்ணியா சுகாதார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் நேற்று (21) மேலும் ஒரு வயது குழந்தை உட்பட 14  பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நேற்று 96 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனைையில் 13 பேர் கொரோனா தொற்றாளராக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். 

இவர்கள் ஏற்கனவே தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்களின் முதனிலை தொடர்பாளர்களாக இருந்தவர்களில் 11 பேரும் எழுமாறாக செய்யப்பட்ட பரிசோதனையில் இருவரும் கொவிட் தொற்றுக்கு இலக்காகியிருந்தனர். மேலும் PCR பரிசோதனை மூலம் ஒருவருமாக மொத்தம் 14 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் அன்டிஜென் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்ட 13 பேர்களின் விபரம் வருமாறு. 

காலம் - 21.05.2021  

1. வயது 24, பெண், மாஞ்சோலை GN

2. வயது 25, ஆண், எகுதார் நகர் GN

3. வயது 49, ஆண், றஹ்மானியா GN

4. வயது 54, பெண், குட்டிக்கராச் GN 

5. வயது 19, பெண், பைசல் நகர் GN

6. வயது 50, பெண், அண்ணல்நகர்GN

7. வயது 34, பெண், கிண்ணியா GN

8. வயது 48, பெண், றஹ்மானியா GN

9. வயது 01,பெண்,பெ.கிண்ணியா GN

10. வயது 52, பெண், பைசல் நகர் GN

11. வயது 15, ஆண், றஹ்மானியா GN

12. வயது 39, பெண், ஆலங்கேணி GN

13. வயது 15, பெண்,ஆலங்கேணி GN

இதேவேளை, நேற்று கிண்ணியா சுகாதாரப் பிரிவில் இருந்து 28 கொரோனா தொற்றாளர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், இதில் 20 பெண்களும் 8 ஆண்களும் அடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். www.newstimetamil.com





 






 








 










No comments