Breaking News

கொரோனா தொற்றினால் கிண்ணியாவில்18 பேர் பலி!

 


கொரோனா தொற்றினால் கிண்ணியாவில் இதுவரை 18 பேர் பலி; அதிர்ச்சியில் சுகாதாரத் துறையினர்!   

(கியாஸ் ஷாபி)

கிண்ணியா சுகாதார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் நேற்று (22) மாத்திரம் மூவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்திருப்பதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் ஏற்பட்ட 3 வது கொரோனா அலையின் மூலம் கிண்ணியா சுகாதாரப் பிரிவில் இன்று  (23.05.2021) காலை 11, 00 மணி வரையுமான காலப்பகுதிக்குள் 18 நபர்கள் கொரோனா தொற்றினால் உயிர் இழந்திருக்கிறார்கள். 

இதில் 12 ஆண்களும் 6 பெண்களும் அடங்குகின்றனர். இந்த இறப்பு வீதமானது தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 

இதேபோன்று தொற்றுக்குள்ளாகி வருவோரின் வீதமும் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றது. கடந்த 21.05.2021 ஆம் தேதி  96 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனைையில் 13 பேர் கொரோனா தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர். 

இவர்கள் ஏற்கனவே தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்களின் முதனிலை தொடர்பாளர்களாக இருந்தவர்கள் 11 பேரும் எழுமாறாக செய்யப்பட்ட பரிசோதனையில் இருவரும் கொவிட் தொற்றுக்கு இலக்காகியிருந்தனர். மேலும் PCR பரிசோதனை மூலம் ஒருவருமாக மொத்தம் 14 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 10 பெண்களும் 4 ஆண்களும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருந்தனர்.

இதேபோன்று நேற்று (22.05.2021) 22 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 8 நபர்கள் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர். இதில் ஒரு பெண்ணும் 7 ஆண்களும் அடங்குகின்றனர். 

இதேவேளை, நேற்று (22) கிண்ணியா சுகாதாரப் பிரிவில் இருந்து 37 கொரோனா தொற்றாளர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், இதில் 24 பெண்களும் 13 ஆண்களும் அடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

மரணமடைந்தோர் விபரம்  (23.05.2021 காலை 11, 00 மணி வரை)

1. 2021.02.23 அப்துல் ஹமீட் (78), ஆண், அடப்பனார் வயல், கிண்ணியா - 5

2. 2021.05.11 ஐ.ராபிதா உம்மா (75), பெண், பிரதான வீதி, கிண்ணியா - 5

3. 2021.05.12 எச்.எச்.சலீம் (81), ஆண், பிரதான வீதி, கிண்ணியா - 3

4. 2021.05.14 ஏ.சி,இஸ்ஹாக்(70), ஆண், அக்ஸா லேன், கிண்ணியா - 2

5. 2021.05.14 வை.இமாம்தீன் (85), ஆண், கிரீன் வீதி, மகரூப் நகர்.

6. 2021.05.15 அப்துல் வதூத் (78), ஆண், UC ரோட், கிண்ணியா - 6

7. 2021.05.16 நோனா உம்மா(98), பெண், ஜாவா வீதி, கிண்ணியா - 7

8. 2021.05.16 பத்திலா உம்மா(78), பெண், அண்ணல் நகர்,கிண்ணியா - 3

9. 2021.05.17 எம்.அக்பர் (67), ஆண், தாமரைவில், கிண்ணியா.

10.2021.05.17 ஏ.ஜெகுபர் (52), ஆண், இடிமன், கிண்ணியா - 4

11.2021.05.17 ஏ. கலீல் றஹ்மான் (62), ஆண், பெருந்தெரு, கிண்ணியா - 6

12.2021.05.19 தாஜுதீன் உபைதீன் (78), ஆண், ஜாவா வீதி, கிண்ணியா - 6 

13.2021.05.20 எச்.எச்.ஏ.லெத்தீப் (70), ஆண், குட்டிக்கராச், கிண்ணியா - 5

14.2021.05.20 ஐ.முஸம்மில் (52), ஆண், மாஞ்சோலை வீதி, கிண்ணியா - 3

15.2021.05.22 எம்.எஸ்.முகமட் றிஸான் (43), ஆண், ஜவா வீதி, கிண்ணியா - 6

16.2021.05.22 எப்.சஹீனா (42), பெண், பைசல் நகர், கிண்ணியா - 3

17.2021.05.22 அசியா உம்மா (70), பெண், P/B, வீதி, கிண்ணியா - 6

18.2021.05.23 லசீனா வீவீ (75), பெண், றஹ்மானியா நகர், கிண்ணியா - 1

www.newstimetamil.com



 






 








 










No comments