Breaking News

கொரோனா தொற்றினால் கிண்ணியாவில் மேலும் இருவர் மரணம்!




கிண்ணியா சுகாதாரப் பிரிவு: 

22.05.2021 நள்ளிரவு 12.00 மணியில் இருந்து 23.05.2021 நள்ளிரவு வரையான விபரம்.

(கியாஸ் ஷாபி)  

கிண்ணியா சுகாதார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் நேற்று (23)  இருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்திருப்பதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டில் ஏற்பட்ட 3 வது கொரோனா அலையின் மூலம் கிண்ணியா சுகாதாரப் பிரிவில் நேற்று வரை (23.05.2021) 19 நபர்கள் கொரோனா தொற்றினால் உயிர் இழந்திருக்கிறார்கள். இதில் 13 ஆண்களும் 6 பெண்களும் அடங்குகின்றனர்.  

நேற்று 22.05.2021 நள்ளிரவு 12.00 மணியில் இருந்து 23.05.2021 நள்ளிரவு வரை இருவர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளர். இதில் வீட்டில் ஒருவரும் கொரோனா சிகிச்சை நிலையத்தில் ஒருவரும் மரணமடைந்துள்ளனர்.

மேலும் இதே காலப்பகுதிக்குள் 84 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனைையில் 10 பேர் கொரோனா தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர். இதில் ஆண்கள் நால்வரும் பெண்கள் அறுவரும் அடங்குவர். மேலும் இதில் 12 வயதுக்குட்பட்ட குழந்தை ஒன்றும் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றது. அத்தோடு இதே காலப்பகுதிக்குள் 6 தொற்றாளர்கள் சிகிச்சைக்காக அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். www.newstimetamil.com





  



 




 





 






 








 










No comments