Breaking News

கிண்ணியாவில் கொரோனா ஜனாஸாக்களை அடக்குவதற்கு அனுமதி!

 




கிண்ணியாவில் கொரோனா ஜனாஸாக்களை அடக்குவதற்கு அனுமதி! 

( கியாஸ் ஷாபி )

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகாமாறு  கிராமத்தில் கொரோனா ஜனாஸாக்களை அடக்குவதற்கு இன்று (25) உத்தியோகபூர்வமாக அனுமதி கிடைத்திருப்பதாக கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்

இந்த பிரதேசத்தில் ஓர் இடம் கொரோனா தொற்றினால் மரணிக்கும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு பொருத்தமானது என ஏற்கனவே சுகாதாரப் பிரிவினரால் அடையாளப்படுத்தப்பட்டு இந்தப் பிரதேசம் தொடர்பாக முழுமையான விபரங்கள் கொழும்பு கொரோோனா கட்டுப்பாட்டு மத்திய நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இதற்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பதாக இன்று (25) எமக்கு அறிவிக்கப்பட்டிருக்இன்றது. 

நீண்டகாலமாக அரசியல்வாதிகளும் நிர்வாக மற்றும் சுகாதாரப் பிரிவினரும் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைத்திருப்பதாகவும்  இந்த வகையில் இதற்காக உழைத்த அனைவருக்கும் கிண்ணியா மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்



No comments