கிண்ணியாவில் நேற்று 24 பேருக்கு கொரோனா!
(கியாஸ் ஷாபி )
கிண்ணியா சுகாதார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் நேற்று (27) மேலும் 24 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், எமது அலுவலகத்தால் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் 69 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில், 20 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதில் 10 ஆண்களும் 10 பெண்களும் அடங்குவர். மேலும் 4 நபர்கள் PCR பரிசோதனை மூலம் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்று கிண்ணியா சுகாதாரப் பிரிவில் இருந்து 39 கொரோனா தொற்றாளர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், இதில் 30 பெண்களும் 9 ஆண்களும் அடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.








No comments