மின்னல் தாக்கி மீனவர்கள் உயிரிழப்பு..!
சாய்ந்தமருதில் சோக நிகழ்வு : மின்னல் தாக்கி மீனவர்கள் உயிரிழப்பு.!
சாய்ந்தமருதில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற இரு மீனவர்கள் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி ஜனாஸாவாக கரை திரும்பிய சோகம் நேற்று இரவு சாய்ந்தமருதில் பதிவானது.
கடலில் தங்கியிருந்து மீன்பிடிக்கும் தொழிலை செய்துவந்த இவர்கள் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மரணித்ததாக இவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர் தெரிவித்தார்.
சாய்ந்தமருதை சேர்ந்த அன்ஸார் என்றழைக்கப்படும் இப்ராஹிம் இக்பால் (வயது-42) மற்றும் எம்.எஸ். அர்சாத் (வயது-35) ஆகியோரே மின்னலுக்கு இலக்காகி மரணித்தவர்களாவர்.
மேலும் காயமடைந்த இப்ராஹிம் மன்சூர் (வயது- 43) மரணித்த (இப்ராஹிம் இக்பாலின் சகோதரர்) கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.






No comments