Breaking News

கிண்ணியாவில் கடைகள் மூடப்பட்டன!!


(கியாஸ் ஷாபி)

கிண்ணியா பிரதேசத்தில் உள்ள அனைத்து அத்தி அவசியமற்ற கடைகளையும் காலவரையறை இன்றி மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை பூரணமாக நடைமுறைப்படுத்துவதற்கு   கிண்ணியா கொரோனா  கட்டுப்பாட்டு குழுவினர் இன்று (5) பிரதேச செயலாளர் தலைமையில்  வீதிதோறும் சென்று கடைகளை மூட வைக்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டனர்.


கிண்ணியா சுகாதார பிரிவில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் கொரோனா தொடர்பாக  நிலைமையை ஆராய்ந்து, திருகோணமலை மாவட்ட செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய உணவு, மருந்து கடைகளைத் தவிர, அனைத்து கடைகளையும் காலவரையறை இன்றி மூடுவதற்கு தீர்மானித்ததாக பிரதேச செயலாளர் முகம்மது கனி தெரிவித்தார்.

No comments