கிண்ணியாவில் கொரோனா திடீர் அதிகரிப்பு!!
( கியாஸ் ஷாபி )
கிண்ணியா சுகாதார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் நேற்று (28.05.2021))திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், எமது அலுவலகத்தால் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் உள்ள இடிமண், அண்ணல் நகர் ஆகிய பகுதிகளில் 33 பேருக்கு மேற்கொள்ளபட்ட அன்டிஜென் பரிசோதனையில், 09 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதில் 06 ஆண்களும் 03 பெண்களும் அடங்குவர். மேலும் 21 நபர்கள் PCR பரிசோதனை மூலம் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் நேற்று கிண்ணியா சுகாதாரப் பிரிவில் 30 பேர் தொற்றுக்கு இலக்காகி இருப்பதாகவும், இது தொடர் அதிகரிப்பைக் காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர், தெரிவிக்கையில், நேற்று பைசல் நகர் கிராமத்தில் வீட்டில் ஒரு கொவிட் மரணம் இடம் பெற்றிருப்பதோடு, கிண்ணியா சுகாதாரப் பிரிவில் இருந்து 20 தொற்றாளர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், இதில் 07 பெண்களும் 13 ஆண்களும் அடங்குகிறார்கள் என்றார்.






No comments