கல்வித்துறையிலும் சாதனை படைத்த ஹெரினா!
கல்வித்துறையிலும் சாதனை படைத்த ஹெரினா!
தேசிய கோலூன்றிப்பாய்தல் மங்கை ஹெரினா
மகாஜனக் கல்லூரியின் கோலூன்றிப்பாய்தல் மங்கை ஹெரினா கலைப்பிரிவில் A2B பெறுபேற்றினை பெற்று, மாவட்ட மட்டத்தில் 133 ஆவது நிலையை பெற்று, பல்கலைக்கழகம் புகும் வாய்ப்பை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் சிறந்த வலைப்பந்தாட்ட வீராங்கனையும் ஆவார். இவர் உயரம்பாய்தலிலும் தேசியமட்டத்தில் பதக்கங்கள் பெற்றவர். பாடசாலை தேசிய மெய்வல்லுனர் போட்டி, கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் போட்டி, சேர்.ஜோன் ட்ராபெற் தேசிய மெய்வல்லுனர் போட்டி என்பவற்றில் கோலூன்றிப்பாய்தலிலும் உயரம் பாய்தலிலும் தங்கம், வெள்ளி, வெண்கலம் என பல பதக்கங்களை பெற்றவர்.






No comments