Breaking News

கிண்ணியாவில் மேலும் எட்டு பேருக்கு கொரோனா!!

 


கிண்ணியாவில் மேலும் எட்டு பேருக்கு கொரோனா!

(கியாஸ் ஷாபி)  

கிண்ணியா சுகாதார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் இன்று (6) எட்டு பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்று 14 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜென் பரிசோதனையில் 3 நபர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 

கடந்த மாதம் 30 ஆம் திகதி அனுப்பப்பட்ட 22 பேரின் PCR பரிசோதனை முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்றன. இதில் 3 நபர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

மேலும், குச்சவெளி பிரதேச செயலகத்தில் கடமை பார்க்கும் கிண்ணியாவைச் சேர்ந்த இருவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதன் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதியில் இருந்து, இன்று (06.05.2021) வரை 55 தொற்றாளர்கள் கிண்ணியா சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தால் இனங்காணப்பட்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். www.newstimetamil.com



 






No comments