Breaking News

ஜனாஸா அறிவித்தல்


வட கிழக்கு இணைந்த முதலாவது மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.ஐ.எம்.ஜமால்தீன்(மாஸ்டர்) இன்று காலமானார்.

பெரிய கிண்ணியாவை பிறப்பிடமாகவும் சின்னக் கிண்ணியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிண்ணியாவின் முதலாவது மாகாணசபை உறுப்பினராவார்.  

மர்ஹூம்களான முகம்மது இஸ்மாயில் - செய்யதும்மா தம்பதிகளின் தலைமகனாக இவர், 1943.12.09 ஆம் திகதி பிறந்தார்.

வயது மூப்பு காரணமாக சிலகாலம் சுகயீனம் உற்ற நிலையில் வாழ்துவந்த இவர், இன்று தனது வீட்டில் காலமானார். 

அன்னாரின் ஜனாஸா சின்னக் கிண்ணியா றஹ்மானியா பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


No comments