அதிகரித்துச் செல்லும் கொரோனா!!
குறுஞ்சாக்கேணி சுகாதாரப் பிரிவில் கொரோனா அதிகரித்துச் செல்கின்றது.பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவும். டொக்டர் அஜீத்
(கியாஸ் ஷாபி)
குறிஞ்சாக்கேணி சுகாதார பிரிவில் இன்று (8) எட்டு பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என குறிஞ்சாக்கேணி சுகாதரார வைத்திய அதிகாரி ஏ,எம்.ஏ. அஜீத் தெரிவித்தார்
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இன்று 15 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜென் பரிசோதனையில் இந்த எட்டு நபர்களின் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
நேற்று (7) 3 நபர்களும் நேற்று முன்தினம் (6) 3 நபர்களும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். எனவே கடந்த இரண்டு தினங்களில் மொத்தம் 14 பேருக்கான தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்த அவர்,
தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றோம், தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான சூழ்நிலைகளே காணப்படுகின்றன. இந்த நிலையில் பொதுமக்கள் பொறுப்பும் பொது நலத்துடனும் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.www.newstimetamil.com






No comments