Breaking News

தேசிய பாடசாலை விவகாரம்: அரசியல் வேண்டாம்!



தி/தி/ஸாஹிறா கல்லூரி தேசிய பாடசாலைகளாக்கும் திட்டத்தில் உள்வாங்கப்பட்டமையை யாரும் அரசியல் மயப்படுத்த வேண்டாம் என கல்லூரியின் அதிபர் ஏ.எஸ்.அலி சப்ரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து, தனது முகநூலில் பதிவொன்றை விடுத்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிடிருப்பதாவது, 

அரசின் 1000 மாகாணப் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்கும் திட்டத்திற்கான தெரிவு , பிரதேச செயலக மட்டத்தில் இடம்பெற்றது. அந்த வகையில் திருகோணமலை ப/சூ பிரதேச செயலகப் பிரிவில் மூன்று இனங்களும் செரிந்து வாழ்வதனால்,

தி/தி/ஸாஹிறா கல்லூரி.

தி/தி/விவேகானந்தா கல்லூரி.

தி/தி/அபயபுர மகா வித்தியாலயம் 

ஆகிய பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்கும் தீர்மானத்தினை, மாகாணக் கல்வித் திணைக்களமும், மாகாணக் கல்வி அமைச்சும் எடுத்தன. இதற்கு தற்பொழுது அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

இந்நிலையில் எமது கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி நிர்வாகக் குழுவின் செயலாளர், அரசியல் சாயம்பூசி தனது முகநூலில் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். இவரது களநிலவரமறியாத, தூரநோக்கற்ற பதிவினால், எமது மாவட்டத்தின் ஆளும் தரப்பு அரசியல்வாதிகளினால் எமது கல்லூரியைப் பற்றியும் எமது சமூகத்தைப் பற்றியும் பிழையான கருத்து நிலவுவதாக, பெற்றார் விசனம் தெரிவித்து வருகின்றனர். (தொடர்ந்து தொலைபேசி அழைப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன).மட்டுமல்ல இவரது பதிவினால் எமது கல்லூரியின் எதிர்கால அபிவிருத்தியும் கேள்விக்குறியாகியுள்ளது.

முன்னாள்அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றார்கள், நலன்விரும்பிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்  ஆகியோர்களின் அயராத உழைப்பினால், பல சவால்களுக்கு மத்தியில் கட்டிவளர்க்கப்பட்ட இக் கல்லூரின் நற்பெயருக்கு , பாடசாலை அபிவிருத்தி நிர்வாகக் குழுவின் செயலாளர் என்ற பதவிப் பெயரை இட்டு, கலங்கம் ஏற்படுத்த வேண்டாம் என, அதிபர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்.

பாடசாலையினதும் சமூகத்தினதும் நன்மை கருதி உங்களது பதிவை அகற்றிவிடுங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.

No comments