கொரோனா தொற்றினால் கிழக்கில் 10842 பேர் பாதிப்பு; 200 பேர் பலி
கொரோனா தொற்றினால் கிழக்கு மாகாணத்தில் இன்று (10) வரை மொத்தமாக 10842 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்களில் மூன்றாவது அலையில் 7 ஆயிரம் பேர் தொற்றுக்கு இலக்காகி இருக்கிறார்கள் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம். தெளபீக் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் தொற்று நிலவரம் தொடர்பாக இன்று (10)
திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சுகாதாரப் பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 24 மணித்தியாலத்தில் ஆகக்கூடுதலாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பிரிவில் 166 பேரும் திருகோணமலை பிராந்திய சுகாதாரப் பிரிவில் 52 பேரும் கல்முனை பிராந்திய
சுகாதாரப் பிரிவில் 17 பேரும் அம்பாரை பிராந்திய சுகாதாரப் பிரிவில் 3 பேரும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இதன்படி கடந்த 24 மணித்தியாலயத்தில் மொத்தமாக 238 பேர் கிழக்கில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த 7 நாட்களில் கிழக்கில் மொத்தமாக 1228 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது சடுதியானதோர் அதிகரிப்பாகும். இதில் மட்டக்களப்பில் ஓர் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. திருகோணமலை பிராந்திய சுகாதாரப் பிரிவில் இன்னும் கணிசமான அளவு குறையவில்லை.
அத்தோடு கல்முனை பிராந்திய சுகாதாரப் பிரிவில் கடந்த ஏழ தினங்களில் கொரோனா தொற்றில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் இந்த பிராந்தியம்தான் குறைந்தளவான தொற்றாளர்களை கொண்டிருந்தது. இதனாலே இந்தப் பகுதிக்கு வக்சின் ஆரம்ப கட்டத்தில் அனுப்பி வைக்கப்படவில்லை. இதேவேளை அம்பாரை பிராந்திய சுகாதாரப் பிரிவில் நோயாளிகள் எண்ணிக்கை குறைவடைந்திருக்கிறது.






No comments