தடுப்பூசியைப் பெறுவவதற்கு வயோதிபர்கள் ஆர்வம்!
(கியாஸ் ஷாபி)
கிண்ணியா பிரதேச சுகாதார பிரிக்கப்பட்ட பகுதியில் இன்றும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இந்த தடுப்பூசி வழங்கும் நிகழ்வு பெரியாற்றுமுனை கிராம சுகாதார நிலையத்திலும் ஆலங்கேணி கிராம சுகாதார நிலையத்திலும் இடம் பெற்றது.
சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய முன்னுரிமை அடிப்படையில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
60 வயதுக்கு மேற்பட்ட அதிகமானவர்கள் தடுப்பூசியை பெறுவதற்கு ஆர்வத்தோடு வந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.












No comments