Breaking News

புற்று நோயாளர்களுக்கு 11 மில்லியன் ரூபாய் செலவில் நோயாளர் விடுதி!

 





எவ்வித தொற்று நிலைமையின் போதும் புற்று நோயாளர்களுக்கு தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய வகையில் 11 மில்லியன் ரூபாய் செலவில் அபேக்ஷா வைத்தியசாலைக்கு நோயாளர் விடுதி


இதற்கான நிதி நன்கொடை வழங்கும் நிகழ்வு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் 02ஆம் திகதி தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

நிலவும் கொரோனா தொற்று நிலைமை காரணமாக அபேக்ஷா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் மற்றும் புற்று நோயாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படின் வழங்கப்படும் விசேட சிகிச்சை காரணமாக அவர்களுக்காக தனியான பிரிவொன்றை துரிதமாக நிறுவ வேண்டும் என மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் விஜித் குணசேகர அவர்களினால் சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கமைய அபேக்ஷா வைத்தியசாலையில் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சைபெறும் எமது சகோதர சகோதரிகளுக்காக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அபேக்ஷா வைத்தியசாலையினுள் புற்று நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட கொரோனா வார்டை நிறுவும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.

நிறுவப்படவுள்ள புற்று நோயாளர்களுக்கான கொரோனா வார்டிற்கான மதிப்பிடப்பட்ட செலவு சுமார் 11 மில்லியன் ரூபாய் ஆகும். அத்துடன் இது தற்காலிக கட்டுமானம் அல்ல என்பதுடன், நாட்டில் ஏற்படும் எவ்வித தொற்று நிலைமையின் போதும் புற்று நோயாளர்களுக்காக தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய வகையில் முழுமையாக நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக 10 மில்லியன் ரூபாய் நிதி பங்களிப்பு 'Global wings charity' அமைப்பினால் வழங்கப்படுவதுடன், இந்த உன்னத சமூக பணிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் சமூக சம்மேளனம் மற்றும் தன்னார்வ இளைஞர் அமைப்பு என்பன பங்களிப்பு வழங்கியுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான புற்று நோயாளர்களுக்கு மற்றும் நாட்டில் ஏற்படும் எவ்வித தொற்று நிலைமையின் போதும் புற்று நோயாளர்களுக்கு தங்கியிருந்து சிகிச்சை பெறக் கூடிய வகையில் அபேக்ஷா வைத்தியசாலையில் நிறுவப்படும் இந்த முழுமையான வைத்தியசாலை வார்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் முழுமையான மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் நிறுவப்படும்.

குறித்த சந்தர்ப்பத்தில் இளைஞர் சேவைகள் தலைவர் தமித விக்ரமசிங்க, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர்களான பண்டார கருணாரத்ன, ஹேமந்த ஸ்ரீ லால், இஷங்க சதுரங்க, இளைஞர் சமூக இயக்கத்தின் சார்பில் அதன் செயலாளர் தில்ஷான் சதுரங்க ஜயகரு மற்றும் இலங்கை இளைஞர் சமூக சம்மேளனத்தின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஊடக பிரிவு​​

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு

 



No comments