Breaking News

பிரித்தானியா வாழ் மக்கள் கிண்ணியா வைத்தியசாலைக்கு உதவி

 

(கியாஸ் ஷாபி)

கிண்ணியா தள வைத்தியசாலையின் கொரோனா பிரிவுக்கு அத்தியாவசியமாக தேவைப்பட்ட ஒரு தொகுதி வைத்திய உபகரணங்களை சதக்கத்துல் ஜாரியா யுகே தர்ம அமைப்பு Sadhakathul Jaariya UK Charity Organization) இன்று (3) வழங்கி வைத்தது.

இதனை கிண்ணியா பிரதேச செயலாளர் முகமது கனி, வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.ஜிப்ரியிடம் கையளித்தார்.

பிரித்தானியாவில் வசிக்கும் கிண்ணியா மக்களால் இந்த பொருட்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது







No comments