Breaking News

கிண்ணியாவில் தொற்று இன்று குறைவடைந்திருக்கிறது.

 


(கியாஸ் ஷாபி)

கிண்ணியா சுகாதார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் இன்று (3)  3 பேர் மாத்திரம் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

எமது அலுவலகத்தால் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் 44 பேருக்கு மேற்கொள்ளபட்ட அன்டிஜென் பரிசோதனையில், இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அத்தோடு வேறு பகுதியில் இருந்து ஒருவர் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார்.

மேலும் 74 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அனைவருக்கும் நெகடிவ் காட்டியதாகவும் தெரிவித்தார். 

இதேவேளை, இன்று  கிண்ணியா சுகாதாரப் பிரிவில் இருந்து 14 கொரோனா தொற்றாளர்கள் கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், இதில் 3 பெண்களும் 11 ஆண்களும் அடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 


  









 








 










No comments