வழிபாட்டு தலங்களுக்கு புண்ணிய வசதிகளைச் செய்தார் பிரதமர்.
கொவிட்-19 நிலைமைக்கு மத்தியில் வசதிகள் கிடைக்காத வழிபாட்டு தலங்களுக்கு கௌரவ பிரதமர் தலைமையில் புண்ணிய வசதிகள்
கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் புண்ணிய வசதிகள் கிடைக்காத விகாரைகள் மற்றும் பிற வழிபாட்டு தலங்களுக்கு குறியீட்டு ரீதியில் நன்கொடை பொதிகளை வழங்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (03) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
பயணத்தடை காரணமாக புண்ணிய வசதிகள் கிடைக்காத விகாரைகள் மற்றும் பிற வழிபாட்டு தலங்களுக்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமரின் ஆலோசனையின் பேரில் இவ்வாறு புண்ணிய வசதிகள் வழங்கும் செயற்பாடு செயற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக நாடு முடக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலும், பயணத்தடை விதிக்கப்பட்ட காலத்திலும் கௌரவ பிரதமரின் ஆலோசனைக்கமைய வழிபாட்டு தலங்களுக்கு புண்ணிய வசதிகள் வழங்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் செயற்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக புண்ணிய வசதிகள் கிடைக்காத விகாரைகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு 'சதொச' நிறுவனத்தின் ஆதரவுடன் உலருணவு பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்படுகின்றன.
இவ்வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கௌரவ பிரதமரினால் நன்கொடை பொதிகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

அதற்கமைய வணக்கத்திற்குரிய கொலொன்னாவே சுகதவங்ஷ தேரர், வணக்கத்திற்குரிய வடகெதர விமலபுத்தி தேரர், அருட்தந்தை.லின்தொடகே பிரஷான் டிலந்த பெர்னாண்டோ, வேகந்த ஜும்ஆ பள்ளிவாசலின் நஸீர் மௌலவி அவர்கள், வெள்ளவத்தை சிவஸ்ரீ வீ.சோமசுந்தர குருக்கள்; ஆகியோர் கௌரவ பிரதமரின் கரங்களினால் நன்கொடை பொதிகளை பெற்றுக்கொண்டனர்.
ராஜகீய பண்டித வணக்கத்திற்குரிய அக்ரஹர கஸ்ஸப தேரர் மற்றும் ஹுணுபிடிய கங்காராம விகாராதிகாரி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் கௌரவ அமைச்சர் பந்துல குணவர்தன, பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) ஜே.சீ.ரணேபுர, பணிப்பாளர் (அபிவிருத்தி) கே.கே.சம்பிகா கனேரு, பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
(பிரதமர் ஊடக பிரிவு)







No comments