Breaking News

கிண்ணியா வைத்தியசாலை ஊழியர்கள் பணி புறக்கணிப்பு !!






(கியாஸ் ஷாபி)

கிண்ணியா தள வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைக்குரிய சகல அடிப்படை வசதிகளையும் செய்து தரக்கோரி வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்களும் உத்தியோகத்தர்களும் இன்று ஒரு மணி நேர பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதன் போது அரசே! வைத்தியசாலையின் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்று, சுகாதார ஊழியர்களின் குடும்பங்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கு, N19 முகக் கவசத்தை தாதியர்களுக்கு பெற்றுக் கொடு, கொவிட் பணிக்காக விசேட கொடுப்பனவு முறை ஒன்றை அறிமுகப்படுத்து! 
இந்த வைத்தியசாலையின் கொவிட் பிரிவுக்கு CCT கெமராவை  பொறுத்து! போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் இந்த ஒரு மணி நேர பணி பகிஷ்கரிப்பை செய்திருந்தனர்.














No comments