வீடு வீடாக சென்று5000/= ரூபாய் கொடுப்பனவு வழங்கல்!
(சர்ஜுன் லாபீர்)
நாட்டில் தற்போது துரிதமாக பரவிவரும் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000/= ரூபாய் கொடுப்பனவு இன்று நாடு பூராகவும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கல்முனை பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் இன்று(2) கல்முனைக்குடி-12, மருதமுனை -1 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் பயணத்தடை காரணமாக ஒவ்வொரு வீடுகளாக சென்று கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.








No comments