நிந்தவூர் அல்லி மூலையில் வாகன விபத்து - ஒருவர் காயம் !
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர் அல்லி மூலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் டிமோ வடி வாகனமும் அருகில் உள்ள கால்வாயில் விழுந்து பலத்த சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்துச் சம்பவம் இன்று (27) மதியம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
குறித்த வாகனத்தின் சாரதி தூக்கத்துடன் வாகனத்தை செலுத்தியதால் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
விபத்தில் காயமடைந்த வாகனச் சாரதி நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.







No comments