தலை மன்னாரில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!
(கியாஸ் ஷாபி)
தலை மன்னார் கிராமம் என்ற பிரதேசத்தில் 8619 கிராம் கேரள கஞ்சாவுடன் இன்று (19) அதிகாலை 20 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமன்னார் பிராந்திய பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைக்காக சந்தேக நபரை தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.







No comments