Breaking News

வர்த்தக நிலையங்கள் பரிசோதனை



யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் யாழ்ப்பாணம், மருதனார்மடம், சுன்னாகம், கந்தரோடை, மாசியப்பிட்டி ஆகிய பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டு விலைதொடர்பான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இதன்போது விலைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டதோடு அதற்கான தீர்வும் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
மேலும் முறைகேடான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments