மறுபடியும் மைத்திரி அலையா?
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் my3 என்ற நாமத்துடன் படமொன்றை பதிவிட்டுள்ளார். இப்படம் தற்போது வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் வெள்ளிக்கிமைகளில் முக்கிய அறிவிப்புகள், வர்த்தமானி அறிவித்தல்கள் என்பன வெளியாகும். இதனால் வெள்ளிக்கிழமை என்பது அரசியல் பரபரப்புமிக்க நாளாக கருதப்பட்டது.
தற்போது மைத்திரி ஆட்சியில் இல்லை. எனினும், வெள்ளிக்கிழமையன்று அவர் வெளியிட்டுள்ள படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






No comments