Breaking News

மிஹிந்தலை புனித பூமியில் நடைபெறவுள்ள அரச பொசொன் விழாவிற்கான செயற்பாடுகள் பிரதமரின் கவனத்திற்கு...

 

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அரச பொசொன் விழா மிஹிந்தலை ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு உரிய மரியாதையுடன் ஏற்பாடு செய்யுமாறு புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (17) பிற்பகல் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மிஹிந்தலை புனித பூமியில் நடைபெறும் அரச பொசொன் விழா தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இம்முறை அரச பொசொன் விழாவை முன்னிட்டு பிரதான நிகழ்வு சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம ரஜ மஹா விகாரையை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்படும்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரச பொசொன் விழாவை முன்னிட்டு மிஹிந்தலை சுற்றுவட்ட பாதையை புனரமைத்து தருமாறு மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய வளவாஹெங்குனவெவே தம்மரதன தேரர் கௌரவ பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

அவரது கோரிக்கையை துரிதமாக நிறைவேற்றுமாறு பிரதமரினால் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் R.W.R. பேமசிறி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


சிதுல்பவ்வ ரஜ மஹா விகாரை 2007ஆம் ஆண்டு புனித பூமியாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட போது ஏற்பட்ட பிழைகள் காரணமாக புனித பூமி ஒன்றுக்கு கிடைக்க வேண்டிய வசதிகள் வசதிகள் இன்றுவரை வழங்கப்படவில்லை என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் ஆராய்ந்து அப்பிழைகளை நிவர்த்தி செய்யும் வகையில் சிதுல்பவ்வ ரஜ மஹா விகாரையை புனித பூமியாக மீண்டும் வர்த்தமானியில் அறிவிக்குமாறு கௌரவ பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் சிதுல்பவ்வ ரஜ மஹா விகாராதிபதி கலாநிதி மெடரம்ப ஹேமரதன தேரர் விகாரையின் சாலை அமைப்பை புனரமைப்பது தொடர்பில் திட்டமொன்றை முன்வைத்தார்.

அதற்கமைய யால தேசிய பூங்காவின் மத்தியில் அமைந்துள்ள சிதுல்பவ்வ ரஜ மஹா விகாரையின் குறித்த சாலை அமைப்பை சரளை இட்டு புனரமைக்குமாறு கௌரவ பிரதமரினால் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார்.

குறித்த சந்திப்பில் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர் உபுல் கலபத்தி, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் R.W.R.பேமசிறி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு


No comments