Breaking News

கிண்ணியா கடற்கரையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது


(கியாஸ் ஷாபி) 

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாற்று கடற்கரையில் சடலம் ஒன்று இன்று(17) காலை 7.00 மணியளவில் கிண்ணியா பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது

கடற்கரையில் இருந்து சுமார் 300 மீட்டர் தெலைவில் இச்சடலம் மீட்கப்பட்டது

மீனவர்களின் கட்டுவலையில் இச்சடலம் ஒதுங்கிய நிலையிலேயே காணப்பட்டது

கறுப்பு நிற நீள காற்சட்டையும், சிகப்பு நிறT சேர்ட்டும், கபில நிற (வுரவ்ன் நிற இடுப்புப் பட்டியும் ) அணிந்து இருந்தார்

உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான வில் வெளியைச் சேர்ந்த முகம்மட் இஸ்மாயில் - றிஸ்வி (வயது 42) எனஅடையாளம் காணப்பட்டது

சடலம் கிண்ணியா தள வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளது

மேலதிக விசாரணை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments